Pages

Saturday, 25 January 2020

ஒவ்வாமைக்கு ஒட்டகப் பால்...

ஒவ்வாமைக்கு ஒட்டகப் பால்:

عَنْ أَنَسٍ أَنَّ نَاسًا كَانَ بِهِمْ سَقَمٌ, قَالُوا يَا رَسُولَ اللَّهِ! آوِنَا وَأَطْعِمْنَا. فَلَمَّا صَحُّوا قَالُو: إِنَّ الْمَدِينَةَ وَخِمَةٌ فَأَنْزَلَهُمْ الْحَرَّةَ فِي ذَوْدٍ لَهُ فَقَالَ اشْرَبُوا أَلْبَانَهَا (بخارى-5685)

அனஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்:

 (மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்' என்று கேட்டனர்.

 (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது.

 பசிப்பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது 'மதீனா(வின் தட்பவெப்ப நிலை) எங்களுக்கு ஒத்துவரவில்லை' என்று கூறினர்.

 அவர்களை நபி (ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த 'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து, 'இவற்றின் பாலை அருந்துங்கள்' என்று கூறினார்கள்.

 (புகாரி-5685)

சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.

 பிகானரியிலுள்ள 'டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச் சென்டரில்' (Diabetes And Care Research Center) பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. 

எகிப்திலுள்ள 'கெய்ரோ பல்கலை கழகத்தில்' 54 சர்க்கரை நோயாளிக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

 இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக்கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. 

ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

 ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் ஊ யும் அதிக அளவில் அடங்கியுள்ளது.

 'கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில்' நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.

No comments:

Post a Comment