பள்ளிவாசலோடு உள்ளத்தை இணக்கமாக்குங்கள்!!!
وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۙ
நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள்.
(அல்குர்ஆன் : 72:18)
இறையில்லத் தொடர்பு!
فعن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - قال: ((سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ: الْإِمَامُ الْعَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ)) البخاري ومسلم
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:
1.நீதிமிக்கஆட்சியாளர்
2. இறைவழிபாட்டிலேயே
வளர்ந்த இளைஞன்.
3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
4. இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்.
5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை(த் தவறுசெய்ய) அழைத்தபோதும் "நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்"
என்று கூறியவர்.
6. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர்.
(ஸஹீஹ் முஸ்லிம் : 1869.)
روى الشيخان في صحيحيهما أن عثمان بن عفان - رضي الله عنه - أراد بناء المسجد، فكره الناس ذلك، وأحبوا أن يدعه، فقال عثمان - رضي الله عنه -: سمعت النبي - صلى الله عليه وسلم - يقول: ((مَنْ بَنَى مَسْجِدًا - قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ - بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ))
البخاري ، ومسلم
உஸ்மான் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்..
“எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இறையில்லத்தைக் கட்டுவாரோ, அவருக்காக அல்லாஹுதஆலா சுவனத்தில் மாளிகை ஒன்றைக் கட்டுகின்றான்”
என்று கூறினார்கள்.
( நூல்:ஸஹீஹ் புகாரி : 450)
روى أبو هريرة أنه - عليه الصلاة والسلام - قال: ((أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا، وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا)).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உலகில் எல்லா இடங்களைக் காட்டிலும் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் இறையில்லங்களாகும்.
மிக வெறுப்பான இடம் கடைவீதிகளாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கின்றேன்.
( நூல்: முஸ்லிம்-1190 )
وقال - عليه الصلاة والسلام -: ((مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنْ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ))"
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“எவர் காலை, மாலை இறையில்லத்திற்குச் செல்கின்றாரோ, அவருக்கு சொர்க்கத்தில் விருந்து உபசரிப்பு செய்ய அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான். காலையோ, மாலையோ அவர் எத்தனை முறை இறையில்லத்துக்குச் சென்றாலும் அத்தனை முறையும் அவருக்கு அந்த ஏற்பாடு செய்யப்படுகின்றது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி -662)
فعن أبي هريرة - رضي الله عنه - قال: قال - عليه الصلاة والسلام -: ((مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ، ثُمَّ مَشَى إِلَى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ فَرَائِضِ اللَّهِ؛ كَانَتْ خَطْوَتَاهُ إِحْدَاهُمَا تَحُطُّ خَطِيئَةً، وَالْأُخْرَى تَرْفَعُ دَرَجَةً( مسلم)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்தி விடுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஸஹீஹ் முஸ்லிம் : 1184)
عن أبي الدرداء رضي الله عنه قال
سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: ((المسجد بيت كل تقي، وتكفل الله
لمن كان المسجد بيته بالروح والرحمة، والجواز على الصراط إلى رضوان الله
إلى الجنة
அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லம் என்பது இறையச்சமுள்ள ஒவ்வொருவரின் இனிய இல்லமாகும். எவருடைய இல்லம் இறையில்லமாக ஆகிவிடுமோ, அவருக்கு ஆரோக்கியத்தை கொடுக்கவும், தன் அருளைப் பொழியவும், சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதில் கடக்கவும், தன் திருப்பொருத்தத்தை அளிக்கவும், மேலான சுவனத்தைத் தரவும் அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: தப்ரானீ )
وأخرج الإمام أحمد رضي الله عنه
عن أبي هريرة رضوان الله عليه
عن النبي صلى الله عليه وسلم قال
إن للمساجد أوتادا الملائكة جلساؤهم ،
إن غابوا يفتقدوهم ، وإن مرضوا عادوهم ، وإن كانوا في حاجة أعانوهم }
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“இறையில்லத்திற்கென பல சிறப்புகள் இருக்கின்றன. எவர்கள் இறையில்லத்தில் ஒன்று கூடுவதை வழக்கமாக்கிக் கொள்கின்றார்களோ, அவர்களுடன் வானவர்கள் அமர்கின்றனர்.
பள்ளியில் அவர்களை காணவில்லை என்றால், வானவர்கள் தேடுகின்றனர். மேலும், அவர்கள் நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்கின்றனர். ஏதேனும் தேவை கருதி அவர்கள் வெளியே சென்றால் அவர்களுக்கு வானவர்கள் உதவுகின்றனர்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அஹ்மத் )
(நூல்: அஹ்மத் )
اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் நிர்வாகம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகை யவர்கள் தான் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். (அல்குர்ஆன் : 9:18)
إذا رأيتم الرجلَ يعتادُ المسجدَ ، فاشْهَدُوا له بالإيمانِ ، قال اللهُ تعالى : إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ والْيَوْمِ الْآخِرِ
ஒருவர் வழமையாக பள்ளிக்கு வருவதை நீங்கள் கண்டால் அவர் ஈமானுள்ளவர் என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்.
{திர்மிதி }
இறையச்சமுள்ள ஒவ்வொருவரின் இனிய இல்லம்
“இறையில்லம்
பள்ளிவாசலாகும்!!!
No comments:
Post a Comment