Pages

Wednesday, 4 December 2019

நல்லதையே தேர்ந்தெடுப்போம்! அல்லதை தவிர்த்திடுவோம்!!

நல்லதையே தேர்ந்தெடுப்போம்! அல்லதை தவிர்த்திடுவோம்!!


فَبَشِّرْ عِبَادِ (17) الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ (18)

அல்லாஹ் கூறுகின்றான்:  “எனவே, (நபியே!) சொல்வதை ஆழ்ந்து கவனமாகக் கேட்டு, பின்பு அவற்றில் சிறந்த அம்சத்தை தேர்ந்தெடுத்து பின்பற்றுகின்ற என் அடியார்களுக்கு நீர் நற்செய்தியை அறிவித்து விடுவீராக! இத்தகையவர்களுக்குத் தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கின்றான். அவர்களே விவேகமான அறிவு படைத்தவர்களாவார்கள்.” 
(அல்குர்ஆன்:39:17,18)

ஆகவே, ஓர் இறை நம்பிக்கயாளன் தன்னுடைய வாழ்வில் அவன் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது அவனுடைய ஈருலக வாழ்வின் வளங்களுக்கு எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.

தான் அணிகிற செருப்பில் இருந்து துவங்கி தன்னுடைய வாழ்வில் அங்கம் வகிக்கிற எந்த ஒன்றாக இருந்தாலும், அது நம்மை ஆட்சி செய்கிற ஆட்சியாளனாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், வாழ்க்கைத் துணையாக இருந்தாலும், மொழிகிற வார்த்தையாக இருந்தாலும் நல்லவற்றையே மிக மிக நல்லவர்களையே தேர்வு செய்ய வேண்டும்.

இன்றைய சரியான தேர்வே! நாளைய சிறந்த வாழ்விற்கான துவக்கம்!!

நல்லதையே தேர்ந்தெடுப்போம்! அல்லதை தவிர்த்திடுவோம்!!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லவற்றை தேர்ந்தெடுக்கின்ற நற்பேற்றை தந்தருள்வானாக!

         ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!

No comments:

Post a Comment