முஸ்லிம்களாகிய நாம் ஒன்றுபடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.....
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا كَذٰلِكَ
يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
மேலும், நீங்கள் யாவரும்
(ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்,
(உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்,
மேலும், உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் (ஒருவர் மற்றவருக்கு) விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான், ஆகவே., அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள், (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள், அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச்செய்தான், நீங்கள் நேர்வழிப் பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்.
(அல்குர்ஆன் : 3:103)
நபி ஸல் அவர்கள் அதிகமாக பயந்திருக்கிறார்கள்.
அந்த ஒரு விஷயம்?
இணைவைப்பைபற்றியோ,
வறுமையைபற்றியோ அல்ல!
فَوَ الله لَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنْ أَخَشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمْ الدُّنْيَا كما بُسِطَتْ على من كان قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كما تَنَافَسُوهَا وَتُهْلِكَكُمْ كما أَهْلَكَتْهُمْ"
صحيح مسلم
அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. மாறாக, உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாக கொடுக்கப்பட்டு அவர்கள் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட்டு,அது அவர்களை அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள்.
(நூல்:முஸ்லிம்-5668)
இன்னொரு ஹதீஸில்
إني لست أخشى عليكم أن تشركوا بعدي، ولكن أخشى عليكم الدنيا؛ أن تنافسوا فيها، وتقتتلوا، فتهلكوا كما هلك
من كان قبلكم
எனக்கு பின்னால் நீங்கள் இணைவைத்துவிடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை.(துன்யாவை) உலக வாழ்க்கையை தான் அஞ்சுகிறேன்,என்றார்கள்.
(நூல்:புகாரி-6426)
இணைவைப்பையும்,
வறுமையையும் பயப்படாத
நபி ஸல் அவர்கள் பிரிவினைவாதத்தை அதிகமாக பயந்திருக்கிறார்கள்.
ஒற்றுமையாக வாழ்ந்து காட்டுவோம்!!!!!
No comments:
Post a Comment