Pages

Tuesday, 3 December 2019

சபை ஒழுக்கங்கள் ...

சபை ஒழுக்கங்கள் ......

عَنِ ابْنِ عُمَرَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لاَيُقِيْمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيْهِ.
رواه البخاري باب لايقيم الرجل الرجل …

ஒருவரை அவர் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுப்பிவிட்டுத் தான் அந்த இடத்தில் அமர்ந்து கொள்ள எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(புகாரி)

 عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَامَ مِنْ مَجْلِسِهِ، ثُمَّ رَجَعَ اِلَيْهِ، فَهُوَ اَحَقُّ بِهِ.
رواه مسلم باب اذا قام من مجلسه ….

ஒருவர் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து (தேவைக்காக) எழுந்து சென்று, பிறகு அவர் திரும்பி வந்தால் அந்த இடத்தில் (அமர) அவரே அதிக தகுதியுடையவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)

 عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لاَ يُجْلَسْ بَيْنَ رَجُلَيْنِ اِلاَّ بِاِذْنِهِمَا.
رواه ابوداؤد باب في الرجل يجلس ….

இரு மனிதர்களுக்கிடையே அவ்விருவரின் அனுமதியின்றி அமர்வது கூடாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்ருப்னு ஷுஐப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)

 عَنْ حُذَيْفَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ لَعَنَ مَنْ جَلَسَ وَسْطَ الْحَلْقَةِ.
رواه ابوداؤد باب الجلوس وسط الحلقة

ஹஜ்ரத் ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சபைக்கு மத்தியில் உட்காருபவரைச் சபித்துள்ளார்கள்”.
(அபூதாவூத்)

தெளிவுரை:- சபைக்கு நடுவே அமருபவர் என்பது, மக்களின் பிடரிகளைத் தாண்டிக் கொண்டு போய் நடுவே அமருபவர் என்பதாம். மற்றோரு பொருள், ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக அமர்ந்திருக்கையில், சபைக்கு நடுவே வந்து ஒருவர் அமர்ந்து கொண்டு அவர்களில் சிலர் சிலரது முகத்தைப் பார்க்க இயலாதபடித் தடையாக இருப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمَجَالِسُ بِالْاَمَانَةِ اِلاَّ ثَلاَثَةَ مَجَالِسَ: سَفْكُ دَمٍ حَرَامٍ، اَوْ فَرْجٌ حَرَامٌ، اَوِ اقْتِطَاعُ مَالٍ بِغَيْرِ حَقٍّ.
رواه ابوداؤد باب في نقل الحديث

சபைகளின் அமானிதம் பாதுகாக்கப்படவேண்டும், அவற்றில் பேசப்பட்ட ரகசியங்கள் பாதுகாக்கப்படவேண்டும், மூன்று சபைகளைத் தவிர! (அவை பாதுகாக்கப்படக் கூடியவையல்ல, மாறாக அவற்றைப் பிறரிடம் சொல்லிவிடுவது அவசியமாகும்) 1. அநியாயமாக கொலை செய்வதற்காக பேசிய ரகசியம், 2. விபச்சாரம் பற்றி பேசிய ரகசியம், 3. அநியாயமாகப் பொருள்களை அபகரிப்பதற்காக பேசிய ரகசியம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- ஹதீஸில் இம்மூன்று செயல்கள் உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டுள்ளன, ஏதேனும் ஒரு சபையில் பாவதரமான ரகசியம், அல்லது அநியாயமான ரகசியம் ஆலோசனை நடைபெற்று, அச்சபையில் நீங்களும் பங்கு பெற்றிருந்தால் அந்த ரகசியத்தை ஒருபோதும் மறைக்கக்கூடாது என்பதே ஹதீஸின் கருத்தாகும்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)

No comments:

Post a Comment