பசி பட்டினியால் தம் வாழ்நாளை கழித்தவர்கள் நபி(ஸல்)அவர்கள்
عن أبي هريرة رضي الله عنه قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يصلي جالسا, فقلت: يا رسول الله! اراك تصلي جالسا فما أصابك؟ فقال النبي صلى الله عليه وسلم: الجوع يا أبا هريرة! فبكيت, فقال: لا تبك يا أبا هريرة, فانّ شدة الحساب يوم القيامة لا تصيب الجائع اذا احتسب في دار الدنيا.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிற்கு அண்ணலாரைக் காண்பதற்காகச் சென்றேன். அப்போது, அண்ணலார் வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.
நான் நபி {ஸல்} அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டு, தொழுது முடித்த பின் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உட்கார்ந்து தொழ நான் கண்டேனே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என வினவினேன்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள் “அபூஹுரைராவே! பசி தான் காரணம்” என்றார்கள். அதைக் கேட்டதும் நான் அழுது விட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னை நோக்கி “அபூஹுரைராவே! இப்போது நான் என்ன சொல்லிவிட்டேன்! என்று அழுகின்றீர்கள்?” நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கின் கஷ்டத்தை உணரும் பட்சத்தில் உலகில் பசியோடு இருக்கும் நிலை ஒன்றும் பெரிதாகத் தெரியாது” என்று பதில் கூறினார்கள்.
( நூல்: அபூதாவூத் )
அகழ் யுத்தத்தின் போது அகழ் தோண்டிக்கொண்டிருந்த ஒரு நபித்தோழர் தம்முடைய பசியை முறையிட்டு விட்டு, நபி {ஸல்} அவர்களிடம் தாம் வயிற்றில் கல் ஒன்றை கட்டியிருப்பதைக் காண்பிக்க, நபி {ஸல்} அவர்கள் அதே பசிக்காக தாங்கள் வயிற்றில் கட்டியிருந்த இரு கற்களைக் காண்பித்தார்கள்.
( நூல்: புகாரி )
No comments:
Post a Comment