Pages

Sunday, 8 December 2019

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவதன் சிறப்பு

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவதன் சிறப்பு 

அல்லாஹ் கூறுகிறான் :

{ وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا (109)} [الإسراء: 109]

இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகம் குப்புற விழுவார்கள் அவர்களுக்கு அது இறையச்சத்தை அதிகமாக்கும்.

அல் குர் ஆன் 17 : 109

س، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ» : 
[حكم الألباني] : صحيح

“ அல்லாஹ்வின் அச்சம் காரணமாக அழுகின்ற மனிதர் ; கறந்தபால் மடுவுக்குள் மீண்டும் நுழையும் வரை ( ஒருபோதும் ) நரகில் நுழைய மாட்டார் அல்லாஹ்வின் வழியில் படிந்த புழுதியும் நரகப் புகையும் இணைந்திடாது “ என்று நபி ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) 

நூல் : ஜாமி உத் திர்மிதீ ( 1633 )

No comments:

Post a Comment