பிறமதக்கலாச்சாரத்தை
பின்பற்ற வேண்டாம்!!!
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ
وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 25:72)
وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:3)
صحيح البخاري عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
((لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا شِبْرًا
وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ))
. قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ: ((فَمَنْ)).
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.
'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். என்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறு யாரை?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(ஸஹீஹ் புகாரி : 7320)
صحيح البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
((لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي
بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ)). فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ. فَقَالَ: ((وَمَنِ النَّاسُ إِلاَّ أُولَئِكَ)).
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள்,
'என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத வரை மறுமைநாள் வராது' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?' என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(ஸஹீஹ் புகாரி : 7319)
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺭﺿﻮاﻥ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﺮﻓﻌﻪ اﻟﻠﻪ ﺑﻬﺎ ﺩﺭﺟﺎﺕ،
ﻭﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺳﺨﻂ اﻟﻠﻪ،
ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﻬﻮﻱ ﺑﻬﺎ ﻓﻲ ﺟﻬﻨﻢ
(صحيح البخاري)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான்.
ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்
(ஸஹீஹ் புகாரி : 6478)
**************************
ﻋﻦ ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟» ، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ،
وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ»
ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﺩاﻭﺩ من المشكاة :
(قال الالباني هذا حديث ﺻﺤﻴﺢ)
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள், அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்று கூறினார்கள்.
ஏனென்றால் அல்லாஹ்விற்கு மாறு செய்து எந்த நேர்ச்சையையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை அதே போல தனக்கு சொந்தமில்லாத பொருளில் நேர்ச்சையை நிறைவேற்றுவதும் கூடாது" என்றும் அறிவுறுத்தினார்கள்.
(நூல் : அபூதாவூத்)
ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ:
ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:
«ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ» ( رواه الترمذي)
“எவன் ஒரு கூட்டத்திற்கு
ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(நூல்: திர்மதி-4031)
பிறமதக்கலாச்சாரத்தை சொல்லவோ
செயல் வடிவம் கொடுக்கவோ ஆதரிக்கவோ ஒருபோதும் கூடாது!!!
No comments:
Post a Comment