Pages

Sunday, 15 December 2019

கணவரின் அனுமதியின்றி நபிலான நோண்பு நோற்கக்கூடாது!!!

கணவரின் அனுமதியின்றி நபிலான நோண்பு நோற்கக்கூடாது!!!


 عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ عِنْدَهُ، فَقَالَتْ: 
يَا رَسُولَ الله ، إِنَّ زَوْجِي صَفْوَانَ بْنَ الْمُعَطَّلِ، يَضْرِبُنِي إِذَا صَلَّيْتُ،

 وَيُفَطِّرُنِي إِذَا صُمْتُ، 

وَلَا يُصَلِّي صَلَاةَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ،

 قَالَ وَصَفْوَانُ عِنْدَهُ، قَالَ: فَسَأَلَهُ عَمَّا قَالَتْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَمَّا قَوْلُهَا يَضْرِبُنِي إِذَا صَلَّيْتُ، فَإِنَّهَا تَقْرَأُ بِسُورَتَيْنِ وَقَدْ نَهَيْتُهَا، قَالَ: فَقَالَ: «لَوْ كَانَتْ سُورَةً وَاحِدَةً لَكَفَتِ النَّاسَ»، وَأَمَّا قَوْلُهَا: يُفَطِّرُنِي، فَإِنَّهَا تَنْطَلِقُ فَتَصُومُ، وَأَنَا رَجُلٌ شَابٌّ، فَلَا أَصْبِرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ: «لَا تَصُومُ امْرَأَةٌ إِلَّا بِإِذْنِ زَوْجِهَا»، وَأَمَّا قَوْلُهَا: إِنِّي لَا أُصَلِّي حَتَّى تَطْلُعَ الشَّمْسُ،فَإِنَّا أَهْلُ بَيْتٍ قَدْ عُرِفَ لَنَا ذَاكَ، لَا نَكَادُ نَسْتَيْقِظُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، قَالَ: «فَإِذَا اسْتَيْقَظْتَ فَصَلِّ»، قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ حَمَّادٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، أَوْ ثَابِتٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّل( رواه ابو داود  .وابن ماجةِ

அபூசயீதில் குத்ரி( ரலி)அறிவிக்கிறார்கள்.நபிகள் நாயகம்( ஸல்)அவர்களின் சபையிலே நாங்கள் அமர்திருக்கும் பொழுது ஒரு பெண் வந்தார்.அவர் நபிகளாரை நோக்கி.என் கணவர் ஸப்வான் இப்னு முஅத்தல் ( ரலி) அவர்கள் நான் தொழுதால் என்னை அடிக்கிறார்.நான் நோன்பு நோற்றால் என்னை நோன்பை விடச் சொல்கிறார்.சூரியன் உதயமாகும் வரை அவர் பஜ்ரு தொழுகையை நிறைவேற்றுவதில்லை என்று கூறினார்.
இந்த மூண்று புகார்களையும் அப்பெண்மணி சமர்ப்பிக்கும் பொழுது அவர்களின் சபையில்தான் அவரின் கணவரும் இருந்தார். நபி ( ஸல்) அவர்கள் உடனே அவரிடம் விசாரனையை ஆரம்பித்தார்கள்.அதற்கு அவர் அளித்த பதில் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தொழுதால் அடிக்கிறார் என்ற என் மனைவியின் குற்றச்சாட்டிற்குரிய விளக்கம் யாதெனில்  என் மனைவி ஒவ்வொரு ரக்அத்திலும் நீளமான இரு அத்தியாயங்களை ஓதுகின்றால். அவ்வளவு நீளமாக ஓதித் தொழுவதைத்தான் வேண்டாம் என்று தடுத்தேனேயன்றி தொழுவதை நான் தடுக்கவில்லை. என்றார்.இவ்வாறு அவர் விளக்கம் கொடுத்தவுடன் அதை ஏற்றுக் கொண்ட நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள் தொழுகையிலே ஒரே ஒரு அத்தியாயமே எல்லோருக்கும் போதுமானதுதான்.என்றார்கள். அடுத்து அவர் தொடர்ந்தார் .யா ரசூலல்லாஹ் என் மனைவியின் அடுத்த குற்றச்சாட்டு அவர் நோன்பு வைப்பதை தடுத்ததாக கூறியிருக்கிறார்.அதற்கு காரணம் என் மனைவி சதா காலமும் ( நபிளான) நோன்பு வைத்துக் கொண்டிருக்கிறார்.நானோ வாலிபன் இல்லறத்தையே வெறுத்துவிடும் அளவிற்கு என்னால்   பொறுமையாக இருக்க முடியவில்லை.அதனால் நபிலான நோன்பை தொடர்ந்து நோற்க வேண்டாமென தடுத்தேன் எனக்கூறினார். அவரது நியாயமான இந்த பதிலைக் கேட்ட மாநபி ( ஸல்) அவர்கள் உடனே ஓர் உத்தரவு பிறப்பித்தார்கள். எந்த ஒரு பெண்ணும் தன் கணவரின் அனுமதியின்றி நபிலான நோண்பு நோற்கக்கூடாது என்றார்கள். மூன்றாவது குற்றச்சாட்டிற்கும் அவர் முறையாக பதில் அளிக்க தொடங்கினார்.நாயகமே நான் சூரியன் உதயமாகும் வரை சுபுஹுத் தொழுவது கிடையாது என்ற என் மனைவியின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மை. அதற்கான காரணம் நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்து( தோட்டத்தில்) தண்ணீர் இரைத்து தொழில் செய்யக்கூடியவர்கள் இது அனைவரும் அறிந்ததுதான். எனவே சுபுஹு வேலையில் எங்களால் எழுந்திருக்க முடியவில்லை.சூரியன் உதிக்கும் பொழுதுதான் விழிக்க முடிகிறது என்று சொன்னார்கள். அந்த தோழரின் உண்மையான வார்த்தைகளின் மூலம் அவரின் யதார்த்த நிலையை அறிந்து கொண்ட  நபியவர்கள் ஸப்வானே நீர் எப்பொழுது கண் விழிக்கின்றீரோ அப்பொழுது உடனே தொழுவீராக என்றார்கள்.

(நூல்:அபூதாவுத்:இப்னுமாஜா)

No comments:

Post a Comment