இறை நினைவும் பேணவேண்டியவைகளும்
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன.
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
திருக்குர்ஆன் 13:28
وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ
அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது.
திருக்குர்ஆன் 29:45
الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ ...
அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள்.
திருக்குர்ஆன் 3:191
فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا...
உங்கள் முன்னோர்களை நீங்கள் நினைப்பது போல், அல்லது அதை விட அதிகமாக உங்களுடைய வழிபாடுகளை முடிக்கும் போது அல்லாஹ்வை நினையுங்கள்! "
திருக்குர்ஆன் 2:200
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ : أَنَا مَعَ عَبْدِي إِذَا هُوَ ذَكَرَنِي، وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ ".
حكم الحديث: صحيح
அல்லாஹ் கூறுகிறான் :
என் அடியான் என்னை நினைத்து அவன் நாவுகள் என் நினைவில் அசைந்து கொண்டிருக்கும் போது நான் அவனுடன் இருக்கிறேன்.
நூல் : இப்னுமாஜா ( 3792 ) தரம் : ஸஹீஹ்
وَاذْكُر رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!
திருக்குர்ஆன் 7:205
No comments:
Post a Comment