- بسم الله الرحمان الرحيم
- إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ
- “திண்ணமாக! இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள். எனவே, உங்களின் சகோதரர்களின் காரியத்தில் சீர்திருத்தத்தையே நீங்கள் நாடுங்கள்!” ( அல்குர்ஆன்: 49: 10 )
- وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ
- “இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் மற்ற இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் நேசர்கள் ஆவார்கள்”
- ( அல்குர்ஆன்: 9: 71 )
- தான் நேசம் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏற்படும் இக்கட்டான, சோதனையான நேரத்தில் நேசம் கொண்ட காரணத்தால் எவ்வாரெல்லாம் அந்த நேசத்தை வெளிப்படுத்துவாரோ அவ்வாறே சிரிய முஸ்லிம்கள் விஷயத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.
- قول رسول الله - صلى الله عليه وسلم -: ((المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا))
- ”ஒரு இறைநம்பிக்கையாளர், மற்றொரு இறைநம்பிக்கையாளருக்குக் கட்டிடத்தைப் போன்றவராவார். எப்படி ஒரு கட்டிடம் நிலைத்திருப்பதற்கு ஒரு செங்கல் இன்னொரு செங்கலின் துணை கொண்டு உறுதிப்படுத்துகின்றதோ அதைப் போன்று” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
- وقوله - عليه السلام -: ((مثل المؤمنين في توادهم وتراحمهم؛ كمثل الجسد، إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى)).
- முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அன்போடும், கருணையோடும் இருப்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் உடலை உதராணமாகச் சொல்லலாம். காய்ச்சலின் போதோ, அல்லது ஏதாவது நோவினையின் போதோ உடலின் ஏதாவது ஒரு உறுப்புக்கு பாதிப்பு என்றால் ஒட்டு மொத்த உடலும் அதில் பங்கெடுத்துக் கொள்கின்றதே அதைப் போன்று” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
Pages
▼
No comments:
Post a Comment