- தொழுகை
- حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي عَنْ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي عِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ قَالَ صَلَّيْتُ الظُّهْرَ فِي بَيْتِي ثُمَّ خَرَجْتُ بِأَبَاعِرَ لِي لِأُصْدِرَهَا إِلَى الرَّاعِي فَمَرَرْتُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي بِالنَّاسِ الظُّهْرَ فَمَضَيْتُ فَلَمْ أُصَلِّ مَعَهُ فَلَمَّا أَصْدَرْتُ أَبَاعِرِي وَرَجَعْتُ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي مَا مَنَعَكَ يَا فُلَانُ أَنْ تُصَلِّيَ مَعَنَا حِينَ مَرَرْتَ بِنَا قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ كُنْتُ صَلَّيْتُ فِي بَيْتِي قَالَ وَإِنْ رواه أحمد
- பனூ தைல் குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
- நான் என்னுடைய வீட்டில் தொழுது விட்டு எனது கால்நடைகளை மேய்ப்பாளரிடம் ஒப்படைப்பதற்காக அவற்றுடன் வெளியே சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் தொழாமல் கடந்து சென்று விட்டேன். எனது கால்நடைகளை மேய்க்க விட்டுவிட்டு திரும்பினேன். (நான் தொழாமல் சென்ற) தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் என்னிடம் இன்னாரே நீர் நம்மைக் கடந்து சென்ற போது ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய வீட்டிலேயே தொழுது விட்டேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள் நீ ஏற்கனவே தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு வந்தால் ஜமாஅத்துடன் தொழ வேண்டும்) என்று கூறினார்கள்.
- நூல் : அஹ்மது (17217)
Pages
▼
No comments:
Post a Comment