Pages

Wednesday, 7 June 2017

நன்மையை வீணாக்க மாட்டேன்

நன்மையை வீணாக்க மாட்டேன்

وفي البخاري أن حكيم بن حزام رضي الله عنه أقبل على رسول الله صلى الله عليه وسلم فقال :
أي رسول الله .. أرأيت أموراً كنت أتحنث بها في الجاهلية .. من صدقة أو .. عتِاقة .. أو صلة رحم .. أفيها أجر ؟
فقال رسول الله صلى الله عليه وسلم : ( أسلمت على ما أسلفت من خير

நபி ஸல் அவர்களின் கரம் பற்றி இஸ்லாமாக வந்த ஹகீம் இப்னு ஹிஸாம் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம்,
அல்லாஹ்வின் தூதர் அவர்களே!அறியாமை காலத்தில் நான் தர்மம்,அடிமை  யை உரிமை விடுதல்,சொந்தங்களை அரவணைக்குதல் போன்ற நற்காரியங்களை செய்துள்ளேன்.
இப்போது நான் இஸ்லாமாகிவிட்டேன்.
அந்த நற்காரியங்களின் நிலை என்ன?என கேட்டார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள்,(அவை வீணாகாமல்)  அந்த நன்மையுடன் இஸ்லாத்திற்கு வந்துள்ளீர் என்றார்கள்.
அல்லாஹு அக்பர்.
இஸ்லாம் கடந்த கால பாவத்தை அழித்து சுத்தப்படுத்துகிறது.அதேநேரம் நன்மையை பாதுகாக்கிறது.அல்லாஹ்வின் தாராள தன்மையை என்னவென்று சொல்வேன்?

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்து விடுகிறான்.வானவர்கள் அதை பதிவு செய்யட்டுமா?என அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறார்கள்.
அல்லாஹ்தஆலா கொஞ்சம் பொருங்கள்,அவன் தவ்பா செய்யலாம் என்கிறான்.
மீண்டும் இரண்டாவது ஒரு பாவத்தை செய்கிறான்.இப்போதும் மலக்குகள் பதிவு செய்ய அனுமதி வேண்டி நிற்கின்றனர்.அப்போதும் அல்லாஹுத்தஆலா கொஞ்சம் பொருமையாக இருக்கச்சொல்கிறான்.
இப்படி ஐந்து தடவை அந்த அடியான் பாவம் செய்து விடுகிறான்.ஆறாவது தடவை ஒரு நல்ல காரியத்தை செய்கிறான்.இப்போது அல்லாஹ் தஆலா அவன் செய்த ஒரு நன்மைக்கு பத்தை பதிவு செய்யுங்கள்.அந்த பத்தில் ஐந்தை கொண்டு அவனின் ஐந்து பாவத்தை அழித்துவிடுங்கள் என்று கூறுகிறான்.இதை செவிமடுத்த ஷைத்தான் தன் தலையில் கைவைத்து ,நான் இவனை பாவம் செய்ய வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்.ஒரு நன்மையால் அத்தனையும் அழிந்து விட்டதே என்று புலம்புகிறான்.

உன் அடியார்களை பாவம் செய்ய தூண்டிக்கொண்டே இருப்பேன். இது ஷைத்தான் அன்று சொன்னது.நான் அடியார்களை மன்னித்து கொண்டே இருப்பேன்.இது அல்லாஹ் அவனுக்கு பதில் சொன்னது.

நிச்சயமாக தவ்பா செய்வதை விட்டும் நாம் சடையும் வரை அல்லாஹ் சலைக்க மாட்டான்

No comments:

Post a Comment