Pages

Thursday, 22 June 2017

தற்பெருமை கூடாது; தற்பெருமை என்றால் என்ன

தற்பெருமை கூடாது; தற்பெருமை என்றால் என்ன

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ، جَمِيعًا عَنْ يَحْيَى بْنِ حَمَّادٍ، - قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنِي يَحْيَى بْنُ حَمَّادٍ، - أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ، عَنْ فُضَيْلٍ الْفُقَيْمِيِّ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ " . قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً . قَالَ " إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ "                                                                
.147. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்

Wednesday, 21 June 2017

நயவஞ்சகனின் குணங்கள்

நயவஞ்சகனின் குணங்கள்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْ نِفَاقٍ حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا خَاصَمَ فَجَرَ " . غَيْرَ أَنَّ فِي حَدِيثِ سُفْيَانَ " وَإِنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ "                            

.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார்.எவரிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டுவிடும் வரை அவருள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்.
பேசினால் பொய் சொல்வதும்,ஒப்பந்தம் செய்து கொண்டால் (நம்பிக்கை) மோசடி செய்வதும்,வாக்களித்தால் மாறுசெய்வதும்,வழக்காடினால் நேர்மை தவறுவது தான் அவை (நான்கும்).

அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வதே (நற்)செயல்களில் மிகவும் சிறந்ததாகும்.

அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வதே (நற்)செயல்களில் மிகவும் சிறந்ததாகும்.

وَحَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ " إِيمَانٌ بِاللَّهِ " . قَالَ ثُمَّ مَاذَا قَالَ " الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ " . قَالَ ثُمَّ مَاذَا قَالَ " حَجٌّ مَبْرُورٌ " . وَفِي رِوَايَةِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ قَالَ " إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ " . وَحَدَّثَنِيهِ                  

135. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்கப் பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது" என்று கூறினார்கள். "பிறகு எது (சிறந்தது)?" என்று கேட்கப்பட்டபோது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள். "பிறகு எது (சிறந்தது)?" எனக் கேட்கப்பட்டபோது, "(பாவச் செயல் எதுவும் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வது" எனும் இடத்தில்) "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்வது" என்று இடம்பெற்றுள்ளது.

தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்"

தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்"

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ يَشْتِمُ الرَّجُلُ وَالِدَيْهِ قَالَ " نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ "            
 .146. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே ஏசுவாரா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)" என்று கூறினார்கள்.

பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங் கள்

"பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங் கள்

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ " الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَأَكْلُ الرِّبَا وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلاَتِ الْمُؤْمِنَاتِ "                                        

.145. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங் களைத் தவிர்த்திடுவீர்!" என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?" என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, (சட்டபூர்வமான) உரிமையின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கள்மீது அவதூறு கூறுவது ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று பதிலளித்தார்கள்.

Monday, 19 June 2017

ஷைத்தான் இரத்த நாளங்களிலும் ஓடுகிறான்

ஷைத்தான் இரத்த நாளங்களிலும் ஓடுகிறான்



3281 عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا رواه البخاري
ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி ) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலி -ல் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். – உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள்.

உடனே, நபி (ஸல்) அவர்கள், “நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்” என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட அவ்விருவரும், “அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் …அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்… என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி),

நூல் : புகாரி (3281)

Sunday, 18 June 2017

தமக்கு விரும்பும் நன்மையை தம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவது

தமக்கு விரும்பும் நன்மையை தம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவது
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ  " لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ - أَوْ قَالَ لِجَارِهِ - مَا يُحِبُّ لِنَفْسِهِ "                                                         நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே “தம் சகோதரருக்கும்” அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்.

Sunday, 11 June 2017

பாவத்தில் வீழ்வதிலிருந்து பாதுகாக்கும் கேடயம் இறையச்சம்....

பாவத்தில் வீழ்வதிலிருந்து பாதுகாக்கும் கேடயம் இறையச்சம்....

حَدَّثَنَا عَطَّافُ بْنُ خَالِدٍ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ خَرَجَ لَيْلَةً يَحْرُسُ النَّاسَ ، فَمَرَّ بِامْرَأَةٍ وَهِيَ فِي بَيْتِهَا وَهِيَ تَقُولُ

تَطَاوَلَ هَذَا اللَّيْلُ وَاسْوَدَّ جَانِبُهْ ... وَطَالَ عَلَيَّ أَنْ لاَ خَلِيلَ أُلاَعِبُهْ
فَوَاللَّهِ لَوْلاَ خَشْيَةُ اللهِ وَحْدَهْ ... لَحُرِّكَ مِنْ هَذَا السَّرِيرِ جَوَانِبُهْ
فَلَمَّا أَصْبَحَ عُمَرُ أَرْسَلَ إِلَى الْمَرْأَةِ ، فَسَأَلَ عَنْهَا ، فَقِيلَ
 هَذِهِ فُلاَنَةُ بِنْتُ فُلاَنٍ ، وَزَوْجُهَا غَازٍ فِي سَبِيلِ اللهِ ، فَأَرْسَلَ إِلَيْهَا امْرَأَةً ، فَقَالَ : كُونِي مَعَهَا حَتَّى يَأْتِيَ زَوْجُهَا ، وَكَتَبَ إِلَى زَوْجِهَا ، فَأَقْفَلَهُ ، ثم دخل على حفصة ابنته رضي الله عنها فقال اني سائلك عن آمر قد أهمني فافرجيه عني. في كم تشتاق امرأة الى زوجها فخفضت رأسها واستحيت قال : فان الله لا يستحي من الحق قَالَتْ : أَرْبَعَةَ أَشْهُرٍ ، أَوْ خَمْسَةَ أَشْهُرٍ ، أَوْ سِتَّةَ أَشْهُرٍ ، فكتب عمر رضي الله عنه ان لا تحـبس الجيوش فوق أربعة اشهر
رواه سعيد بن منصور في سننه واخرجه عبد الرزاق في مصنفه

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. ஒரு நாள் இரவு உமர் (ரலி) அவர்கள் நகர்வலம் வருகின்றார்கள். ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது. அழுகையின் ஊடாக இடையே ஏதோ சில வாசகங்களையும் அப்பெண்மனி உதிர்த்துக் கொண்டிருந்தார்.

செவியைக் கூர்மையாக்கி கேட்கின்றார்கள். அப்பெண்மனி “எத்துனை இரவுகள் என் துணைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. எத்துனை நீண்டதாகத் தெரிகிறது இந்த இரவுகள்? என் துணைவர் என்னுடன் கொஞ்சிக் குலாவாமல் எங்கோ இருப்பதனால்….

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! அல்லாஹ்வின் அச்சம் மட்டும் என் உள்ளத்தில் இல்லாது போயிருக்குமானால், இந்த கட்டில் என்றோ அதன் உண்மைத் தன்மையை இழந்திருக்கும்… என் தேகமும் தான்…” என்ற பொருள் பட கவி நடையில் தன் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

கவிதை வரிகள் உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தைப் பிழிந்தது. நெருஞ்சி முள்ளாய் தைத்தது. அங்கிருந்து அமைதியாய் அகன்று விட்டார்கள்.

மறுநாள் காலை அந்த வீட்டின் விவரங்களை சேகரிக்க உத்தரவுகள் பரந்தன. இறுதியில், அப்பெண்மனியின் கணவர் அறப்போரில் கலந்து கொள்ளச் சென்று, நீண்ட காலம் ஆகியும் திரும்பி வரவில்லை என்கிற தகவல் பெறப்பட்டு கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனே, கலீஃபா உமர் (ரலி) அவர்கள் “ஒரு பெண்ணை தன்னோடு அழைத்துக் கொண்டு அப்பெண்மனியின் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பெண்மனியை அழைத்து “தன்னோடு அழைத்து வந்த அப்பெண்மனியை சுட்டிக் காட்டி இதோ! இப்பெண்மனியை  உங்களுக்குத் துணையாக வைத்துக் கொள்ளுங்கள்! தங்கள் கணவருக்கு நான் கடிதம் எழுதி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டு வர ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினார்கள்.

பின்னர், நேராக தங்களுடைய மகளான உம்முல் முஃமினீன் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று ”மகளே! கடந்த இரு தினங்களாக என் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருக்கிற ஒரு விஷயத்திற்கு நீ தெளிவாக விடையளித்து, என் உள்ளத்தை சிரமத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்” என்று கூறி விட்டு…

”தம் கணவனை விட்டும் பிரிந்து வாழ்கிற ஒரு பெண் எவ்வளவு நாள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, இயல்புகளோடு இருக்க இயலும்” என்று கேட்டார்கள்.

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார்கள். தந்தையே! என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரிந்து தான் கேட்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ் சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை” என்கிற இறைவசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, நடந்த சம்பவத்தை கூறினார்கள்.

அப்போது, அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் “நான்கு மாதம் அல்லது ஆறு மாதம்” என்று பதில் கூறினார்கள்.

இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் விரைவாக மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி வந்தார்கள். அறப்போரில் பங்கு பெற உலகின் நாலா பாகங்களுக்கும் சென்றிருக்கிற அத்துனை படைத் தளபதிகளுக்கும் “நான்கு மாதங்களுக்கு மேலாக படையில் பங்கு பெற்றிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் ஒரு மாத காலம் விடுப்பு கொடுத்து அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்; இனிமேல் எந்தப் படை வீரர்களும் நான்கு மாதத்திற்கு மேல் போர்ப் பணி செய்யக்கூடாது” என கடிதம் எழுதி தூது அனுப்பினார்கள்.

        ( நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}…. }

ஆச்சர்யமூட்டும் இறையச்சம்….

ஆச்சர்யமூட்டும் இறையச்சம்….

و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى وَهُوَ ابْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ عَنْ غَيْلَانَ وَهُوَ ابْنُ جَامِعٍ الْمُحَارِبِيُّ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ
جَاءَ مَاعِزُ بْنُ مَالِكٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا كَانَتْ الرَّابِعَةُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ فِيمَ أُطَهِّرُكَ فَقَالَ مِنْ الزِّنَى فَسَأَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبِهِ جُنُونٌ فَأُخْبِرَ أَنَّهُ لَيْسَ بِمَجْنُونٍ فَقَالَ أَشَرِبَ خَمْرًا فَقَامَ رَجُلٌ فَاسْتَنْكَهَهُ فَلَمْ يَجِدْ مِنْهُ رِيحَ خَمْرٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَزَنَيْتَ فَقَالَ نَعَمْ فَأَمَرَ بِهِ فَرُجِمَ فَكَانَ النَّاسُ فِيهِ فِرْقَتَيْنِ قَائِلٌ يَقُولُ لَقَدْ هَلَكَ لَقَدْ أَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ وَقَائِلٌ يَقُولُ مَا تَوْبَةٌ أَفْضَلَ مِنْ تَوْبَةِ مَاعِزٍ أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ فِي يَدِهِ ثُمَّ قَالَ اقْتُلْنِي بِالْحِجَارَةِ قَالَ فَلَبِثُوا بِذَلِكَ يَوْمَيْنِ أَوْ ثَلَاثَةً ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ جُلُوسٌ فَسَلَّمَ ثُمَّ جَلَسَ فَقَالَ اسْتَغْفِرُوا لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالُوا غَفَرَ اللَّهُ لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ أُمَّةٍ لَوَسِعَتْهُمْ قَالَ ثُمَّ جَاءَتْهُ امْرَأَةٌ مِنْ غَامِدٍ مِنْ الْأَزْدِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكِ ارْجِعِي فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ فَقَالَتْ أَرَاكَ تُرِيدُ أَنْ تُرَدِّدَنِي كَمَا رَدَّدْتَ مَاعِزَ بْنَ مَالِكٍ قَالَ وَمَا ذَاكِ قَالَتْ إِنَّهَا حُبْلَى مِنْ الزِّنَى فَقَالَ آنْتِ قَالَتْ نَعَمْ فَقَالَ لَهَا حَتَّى تَضَعِي مَا فِي بَطْنِكِ قَالَ فَكَفَلَهَا رَجُلٌ مِنْ الْأَنْصَارِ حَتَّى وَضَعَتْ قَالَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ وَضَعَتْ الْغَامِدِيَّةُ فَقَالَ إِذًا لَا نَرْجُمُهَا وَنَدَعُ وَلَدَهَا صَغِيرًا لَيْسَ لَهُ مَنْ يُرْضِعُهُ فَقَامَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ إِلَيَّ رَضَاعُهُ يَا نَبِيَّ اللَّهِ قَالَ فَرَجَمَهَا فَيُقْبِلُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِحَجَرٍ فَرَمَى رَأْسَهَا فَتَنَضَّحَ الدَّمُ عَلَى وَجْهِ خَالِدٍ فَسَبَّهَا فَسَمِعَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّهُ إِيَّاهَا فَقَالَ مَهْلًا يَا خَالِدُ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ تَابَهَا صَاحِبُ مَكْسٍ لَغُفِرَ لَهُ ثُمَّ أَمَرَ بِهَا فَصَلَّى عَلَيْهَا وَدُفِنَتْ..

விபச்சாரக் குற்றத்தில் ஒருவர் ஈடுபட்டால் அது தண்டனை வழங்கும் அளவிற்கான குற்றம் என்பதாக அல்லாஹ் இறைவசனத்தை இறக்கியருளியிருந்த தருணம் அது…

புரைதா, இப்னு அப்பாஸ், அனஸ் ( ரலி – அன்ஹும் ) அறிவிக்கின்றார்கள்:

பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த மாஇஸ் இப்னு மாலிக் என்கிற நபித்தோழர்  நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டும்  தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

மீண்டும் வந்து முறையிடவே, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு கூறி மாயிஸ் (ரலி) அவர்களை நபி {ஸல்} அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு, அவர் மூன்று முறை அண்ணலாரின் சபைக்கு வருவதும், செல்வதுமாக இருந்தார்.

நான்காவது முறையாக முன்பு போல் அவர் அவ்வாறு கூறவே அவரை நோக்கி அண்ணலார் {ஸல்} அவர்கள் ”(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!” என்றார்கள்.

ஆனால், அவரோ முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ”உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார்.

ஆனால், அவரோ மீண்டும் முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது, அருகில் இருந்த நபித்தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “இவர் மது அருந்தி இருக்கிறாரா?” என்று பரிசோதித்துப் பாருங்கள்” என்றார்கள்.

பரிசோதித்த நபித்தோழர்கள் “இல்லை, இவர் மது அருந்த வில்லை” என்று பதில் கூறினார்கள்.


இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சாடைமாடையாகக் கேட்காமல் ”அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ”ஆம்'” என்று கூறினார்.

அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பெருநாள் தொழுகைத் திடல்  அருகில்  அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அப்போது,  நபி (ஸல்) அவர்கள் ”அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்”.

மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர்கள் அல்ல.

மாறாக, தான் செய்த தண்டனைக்குரிய குற்றத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் உள்ளத்தில் வெளிப்பட்ட தக்வா - இறையச்சம்தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சமூகம் நோக்கி இழுத்து வந்தது.

அங்கே, மாயிஸ் (ரலி) குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை கேட்டபோது, மாயிஸ் (ரலி) அவர்களின் இறையச்சத்தை அறிந்த  நபியவர்கள்,

”போய் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்” என்றார்கள். பின்னர், உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், இவர் மது குடித்திருக்கின்றாரா? என பரிசோதிக்கச் சொல்கின்றார்கள்.

பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம்; அல்லது ஆசையோடு பார்த்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ் (ரலி) அவர்களை திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றார்கள்.

ஆனாலும், மாயிஸ் (ரலி) அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்கள்.

தான் செய்த பாவத்தை தம்மைத் தவிர யாருமே பார்க்காத போதும், படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற இறையச்சத்தால் உந்தப்பட்டு, வேதனை மிகுந்த தண்டனையை  ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ் (ரலி) அவர்களை பொருந்திக் கொள்வானாக!

இந்த தண்டனை வழங்கப்பட்டு சில நாட்கள் கூட கழிந்திருக்காத நிலையில் அண்ணலாரையும், நபித்தோழர்களையும் அதிர்ச்சியடையச் செய்த ஓர் சம்பவம் நபிகளாரின் சபையில் நடந்தேறியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.
வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது, அப்பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக இருக்கின்றேன்” என்று கூறினார்.

நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடு “நீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ”ஆம்” என்றார்.

அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து “இது நான் பெற்றெடுத்த குழந்தை” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டது” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.

அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.

பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.
அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள்.

இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார்.

பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.” என்று கூறினார்கள்.

பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள்.

அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும் செய்யப்பட்டார்.

( நூல்: முஸ்லிம், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, புகாரி, பாபு மன் தரகல் ஃபவாஹிஷ், ஹதீஸ் எண்: 6820, 6824, மிஷ்காத், கிதாபுல் ஹுதூத், பக்கம்: 310 )

தக்வா என்றால் என்ன?

தக்வா என்றால் என்ன?

أما التقوى: لغة فهي مأخوذة من الوقاية وما يحمي به الإنسان رأسه.
اصطلاحا: أن تجعل بينك وبين ما حرّم الله حاجبا وحاجزا.

தக்வா التقوى எனும் சொல் விகாயத் ( பாதுகாத்து கொள்ளல்) என்னும் வேர் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அகராதியில் தன்னைத் தானே ஒரு மனிதன் பாதுகாத்துக் கொள்வது என்பதாகும்.

ஷரீஅத்தின் புழக்கத்தில் “இறைவன் வெறுக்கும் செயல்களை விட்டும் தன்னை பாதுகாத்து கொள்வது தான் தக்வாவின் அடிப்படை.

وسأل عمر كعبا فقال له: ما التقوى؟ فقال كعب: يا أمير المؤمنين أما سلكت طريقا فيه شوك؟ قال: نعم. قال: فماذا فعلت؟ فقال عمر: أشمر عن ساقي، وانظر إلى مواضع قدمي وأقدم قدما وأؤخر أخرى مخافة أن تصيبني شوكة. فقال كعب: تلك هي التقوى.

உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅபு (ரலி) அவர்களிடத்திலே “தக்வா” என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு, உபை (ரலி) அவர்கள் “நீங்கள் முட்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டில் நடந்து செல்வதுண்டா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “ஆம்” என்றார்கள். ”எப்படிக் கடந்து சென்றீர்கள்?” சொல்லுங்கள்! என உபை (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “உடல் மற்றும் உடையைப் பாதுகாத்தவாறு, வழியையும் கடக்க வேண்டும். அதே நேரத்தில் உடலிலோ, உடையிலோ முள்ளும் தைத்து விடக் கூடாது என மிக கவனத்தோடும், பேணுதலோடும் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பேன்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது, உபை (ரலி) அவர்கள் “இவ்வாறு தான் இறையச்சமும்” என்று பதிலளித்தார்கள்.

அதாவது, மனிதன் தன் வாழ்க்கையில் ஈமானும் கெட்டு விடாமல், அமலும் கெட்டு விடாமல் சூழ்நிலை எனும் முட்கள் நாலாபுறமும் சூழ்ந்திருக்க, அவற்றில் சிக்கி விடாமல் விலகியிருந்து கவனமாக வாழ்க்கையை கழிப்பது தான் இறையச்சம் எனப்படும்.

கேள்வி&பதில்

💚Assalamualaikum

1. நாம் யார்?
 💚நாம் முஸ்லிம்கள்.

2. நம் மார்க்கம் எது?
💚 நம் மார்க்கம் இஸ்லாம்.

3. இஸ்லாம் என்றால் என்ன?
 💚அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது.

4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை?
 💚இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து.
அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.

5. கலிமாவை கூறு
💚 லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்

6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.
 💚வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.

7. ஒரு நாளைக்கு கடமையான தொழுகை எத்தனை? அவை யாவை?
 💚ஒரு நாளைக்கு கடமையான தொழுகை ஐந்து. அவை
சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா

8. நோன்பு நோற்பது எப்போது கடமை?
 💚ரமலான் மாதத்தின் 30 நாளும் நோன்பு நோற்பது கடமையாகும்.

9. ஜகாத் என்றால் என்ன?
 💚பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40ல் ஒரு பகுதியை கொடுப்பது ஜகாத் ஆகும்.

10. ஹஜ் என்றால் என்ன?
 💚துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில் புனித 'காபா'வை வலம் வந்து, முக்கிய இடங்களில் தங்கி, வணக்கம் புரிவது ஹஜ் ஆகும்.

11. ஹஜ் செய்வது யார் மீது கடமை?
 💚உடல் வசதியும், பண வசதியும் உடையவர்கள் மீது ஆயுளில் ஒரு முறை
ஹஜ் செய்வது கடமையாகும்.

12. ஈமான் என்றால் என்ன?
 💚ஈமான் என்பது உறுதியான நம்பிக்கை ஆகும்.

13. முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதர் யார்?
 💚முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள்.

14. முதன் முதலில் படைக்கப்பட்ட பெண்மணி யார்?
 💚ஆதம் (அலை) அவர்களின் மனைவியான ஹவ்வா (அலை)

15. தாயும், தந்தையும் இல்லாதவர் யார்?;
💚 நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவர்.

16. தந்தை இல்லாமல் பிறந்தவர் யார்?
 💚நபி ஈஸா (அலை) அவர்கள்.

17. நாம் யாருடைய பிள்ளைகள்?
 💚நபி ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகள்.

18. நாம் யாருடைய உம்மத்தினர்?
 💚நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்.

19. அல்லாஹ் மனிதனை எதிலிருந்து படைத்தான்?
 💚அல்லாஹ் மனிதனை களி மண்ணிலிருந்து படைத்தான்.

20. மலக்குகளை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்?
 💚அல்லாஹ் மலக்குகளை ஒளியிலிருந்து படைத்தான்.

21. அல்லாஹ் ஷைத்தானை எதிலிருந்து படைத்தான்?
 💚அல்லாஹ் ஷைத்தானை நெருப்பிலிருந்து படைத்தான்.

22. ஷைத்தான்களின் தலைவன் யார்?
 💚இப்லீஸ்.

23. மனிதர்களின் எதிரி யார்?
 💚இப்லீஸ. ஷைத்தான்.

24. குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
💚 25 பேர்

25. அல்லாஹ் மனிதர்களை எதற்காக படைத்தான்?
 💚அல்ல
ாஹ்வை வணங்குவதற்காக.

26. அல்லாஹ் மனிதனை என்ன தன்மையில் படைத்தான்?
 💚எல்லா படைப்பினங்களிலும் சிறந்தவனாக

27. ஷைத்தான் என்பதின் பொருள் என்ன?
 💚அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவன் என்பதாகும்.

28. இப்லீஸ் என்பதன் பொருள்?
 💚குழப்பவாதி என்பது பொருள்.

29. ஷைத்தான்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?
 💚ஜின் இனத்தைச் சார்ந்தவர்கள்.

30. நம் வேதத்தின் பெயர் என்ன?
💚 அல்குர்ஆன்

31. நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் எந்த இரவில் வழங்கப்பட்டது?
 💚ரமலான் மாதம் லைலதுல் கத்ர் இரவில் வழங்கப்பட்டது.

32. நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் நபி ஆனார்கள்?
💚 40 வயதில்

33. மக்கீ சூரா என்றால் என்ன?
💚 மக்காவில் இறங்கிய சூரா.

34. மதனீ சூரா என்றால் என்ன?
💚 மதீனாவில் இறங்கிய சூரா.

35. குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
 💚குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா அத்தவ்பா ஆகும்.

36. (ஸல்) என்ற சுருக்கத்தை எப்படி வாசிக்க வேண்டும்?
 💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும்.

37. நபிமார்கள் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 💚அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.

38. நம் நபியின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்ல வேண்டும்.

39. திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் எத்தனை?
💚 114 சூராக்கள் ஆகும்.

40. ரசூல்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
💚 313 பேர் ஆவார்கள்.

41. திருக்குர்ஆனில் உள்ள சஜ்தா ஆயத்துக்கள் எத்தனை?
 💚14

42. குர்ஆனில் முதன் முதலில் இறங்கிய வசனம் எது?
💚இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ

43. இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் எது?
💚 முஹர்ரம்

44. நபி (ஸல்) எந்த மாதத்தில் பிறந்தார்கள்?
💚 ரபீயுல் அவ்வல்

45. மிஃராஜ் என்றால் என்ன?
 💚நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்

46. பிறர் தும்மினால் நாம் என்ன சொல்லவேண்டும்?
 💚யர்ஹமுகல்லாஹ்.

47. திருக்குர்ஆனிலேயே மிகச் சிறிய அத்தியாயம்-சூரா எது?
 💚சூரா கவ்ஸர்.

48. நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?
 💚40 வயது

49. துன்பம் ஏற்பட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 💚இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

50. உயிரை வாங்கும் வானவர் யார்?
 💚மலக்குல் மௌத்

51. திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) - எத்தனை?
 💚6666

52. தும்மினால் என்ன சொல்ல வேண்டும்?
 💚அல்ஹம்து லில்லாஹ்

53. வஹீ என்றால் என்ன?
 💚அல்லாஹ்வின் செய்தி.

54. வஹீ கொண்டு வரும் வானவர் யார்?
💚 ஜிப்ரயீல் (அலை)

55. இஸ்திக்பார் என்றால
் என்ன?
 💚பாவமன்னிப்பு தேடுவது.

56. முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
 💚பிலால் (ரளி)

57. முதல் கலீபா யார்?
 💚அபூ பக்கர் சித்தீக் (ரளி)

58. மன்னிக்கப்படாத பாவம் எது?
 💚குப்ர் - இறைமறுப்பு, ஷிர்க் - அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.

59. கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார்?
 💚நபி மூஸா (அலை)

60. எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும்?
 💚குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு

61. அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது?
 💚பள்ளிவாசல்

62. யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது?
 💚தாயின் காலின் கீழ்.

63. பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது.
💚  7 வயது.

64. பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும்?
 💚ஃபீ அமானில்லாஹ்

65. நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன?
💚 கிராமன் காதிபீன்.

66. பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது?
💚 எகிப்து (மிஸ்ர்)

67. இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது?
💚 நபி, ரசூல்

68. இஸ்லாம் என்பதின் பொருள் என்ன?
 💚அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.

69. உலகம் முழுவதையும் படைத்தது யார்?
 💚அல்லாஹ்.

70. அஸ்ஸலாத் என்றால் என்ன?
♥தொழுகை

71. திருக்குர்;ஆன் எந்த மொழியில் உள்ளது?
 💚அரபி மொழியில்.

72. அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன?
 💚அளவற்ற அருளாளன்.

73. திருக்குர்ஆனின் முதல் சூரா எது?
 💚சூரா அல் பாத்திஹா

74. முஸ்லிமின் முதல் கடமை என்ன?
 💚தொழுகை.

75. மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது?
 💚கஃபா.

76. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது?
 💚நரகம்.

77. பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர்.?
 💚313 நபர்கள்.

78. ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன?
 💚நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி ஹஜ் ஆகும்.

79. நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?
 💚ஒன்று

80. நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார்?
💚 நபி சுலைமான் (அலை)

81. நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
 💚ஏழுபேர். 3ஆண்கள்  4 பெண்கள்

82. ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார்?
♥ அபூ ஹுரைரா (ரளி)

83. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்)   மனைவி யார்?
♥ அன்னை ஆயிஷா (ரளி)

84. திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
♥ சூரா தவ்பா.

85. முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
♥ கதீஜா (ரளி)

86. திக்ருகளில் சிறந்தது எது?
♥ லாஇலாஹ இல்லல்லாஹ்

87.
சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
♥ அலி (ரளி)

88. நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார்?
♥ அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி)

89. ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள்?
♥ 2 ரக்அத்கள்.

90. நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர்?
♥ தாயார் ஆமினா, தந்தையார் அப்துல்லாஹ்.

91. நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
♥ அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.

92. நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
♥ ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.

93. இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
♥ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.

94. முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது?
♥ ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில்,  தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.

95. சொர்க்கங்களிலேயே உயர்ந்த சொர்க்கம் எது?
♥ ஜன்னதுல் பிர்தவ்ஸ்.

96. எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை?
♥ மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு

97. நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபி' என்று சொன்ன பொய்யன் யார்?
♥ முஸைலமதுல் கத்தாப்.

98. ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது?
♥ ஸஹீஹுல் புகாரி.

99. உண்மையான வீரன் யார்?
♥ கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவன்.

100. நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
♥ 63 ஆண்டுகள்


Saturday, 10 June 2017

இறைநம்பிக்கையின் இனிமையை உணர்ந்திட ஒருவரிடம் அமைந்திருக்க வேண்டிய பண்புகள்

இறைநம்பிக்கையின் இனிமையை உணர்ந்திட ஒருவரிடம் அமைந்திருக்க வேண்டிய பண்புகள்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم  " ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ طَعْمَ الإِيمَانِ مَنْ كَانَ يُحِبُّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ وَمَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَمَنْ كَانَ أَنْ يُلْقَى فِي النَّارِ أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ فِي الْكُفْرِ بَعْدَ أَنْ أَنْقَذَهُ اللَّهُ مِنْهُ " .நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் இனிமையை உணர்வார். (அவை:)
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட நேசத்திற்குரியோராய் இருப்பது.
2. அவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை நெருப்பில் தாம் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று அவர் வெறுப்பது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மனைவி மக்களையும் பெற்றோரையும், மக்கள் அனைவரையும் விட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பது

மனைவி மக்களையும் பெற்றோரையும், மக்கள் அனைவரையும் விட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பது
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم  " لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ " . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கு தம் குடும்பத்தார்,தமது செல்வம்,ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை “எந்த அடியாரும் அல்லது எந்த மனிதரும்,இறை நம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்.-இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தமக்கு விரும்பும் நன்மையை தம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவது

தமக்கு விரும்பும் நன்மையை தம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவது
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ  " لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ - أَوْ قَالَ لِجَارِهِ - مَا يُحِبُّ لِنَفْسِهِ " நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே “தம் சகோதரருக்கும்” அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்.

அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.

அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - قَالَ أَخْبَرَنِي الْعَلاَءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ  " لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لاَ يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ " .அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அண்டைவீட்டாரைக் கண்ணியப்படுத்துதல்,நல்லதையே பேசுதல் அல்லது வாய்மூடி இருத்தல்

அண்டைவீட்டாரைக் கண்ணியப்படுத்துதல்,நல்லதையே பேசுதல் அல்லது வாய்மூடி இருத்தல்
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ  " مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ " .அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்,அல்லது வாய்மூடி இருக்கட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தீமைகளை தடுப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்

தீமைகளை தடுப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، - وَهَذَا حَدِيثُ أَبِي بَكْرٍ - قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ . فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ . فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ  " مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ " .அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள்;அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.அந்தத் தோழர்களுக்கு பிறகு சிலர் வருவார்கள்.அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள்.தமக்கு கட்டளையிடப்படாதவற்றைச் செய்வார்கள்.ஆகவே,யார் இ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார்.யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிகையாளர்தாம்.இவற்றுக்கப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது.

வணக்க வழிபாடுகள் குறைவதால் இறைநம்பிக்கையும் குறையும்

வணக்க வழிபாடுகள் குறைவதால் இறைநம்பிக்கையும் குறையும்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ الْمِصْرِيُّ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ وَأَكْثِرْنَ الاِسْتِغْفَارَ فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ " . فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ جَزْلَةٌ وَمَا لَنَا يَا رَسُولَ اللَّهِ أَكْثَرَ أَهْلِ النَّارِ . قَالَ " تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ وَمَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَغْلَبَ لِذِي لُبٍّ مِنْكُنَّ " . قَالَتْ يَا رَسُولَ اللَّهِ وَمَا نُقْصَانُ الْعَقْلِ وَالدِّينِ قَالَ " أَمَّا نُقْصَانُ الْعَقْلِ فَشَهَادَةُ امْرَأَتَيْنِ تَعْدِلُ شَهَادَةَ رَجُلٍ فَهَذَا نُقْصَانُ الْعَقْلِ وَتَمْكُثُ اللَّيَالِيَ مَا تُصَلِّي وَتُفْطِرُ فِي رَمَضَانَ فَهَذَا نُقْصَانُ الدِّينِ " .132. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுகையில்), "பெண்கள் சமுதாயமே! தானதர்மங்கள் செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் கண்டேன்" என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, "நரகவாசிகளில் அதிகம் பேராக நாங்கள் இருப்பதற்கு என்ன காரணம்? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் அதிகமாகச் சாபம் கொடுக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள்; அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும், அறிவிற் சிறந்தோரைக்கூட (கவர்ச்சியால்) வீழ்த்தக் கூடியவர்களாகவும் (பெண்களான) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் காணவில்லையே" என்று பதிலளித்தார்கள்.
அப்பெண்மணி, "அறிவிலும் மார்க்கத்திலும் எங்களுடைய குறைபாடு என்ன? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிவிலுள்ள குறைபாடு யாதெனில், ஓர் ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியம் நிகராகிறது. இதுதான் (பெண்களின்) அறிவிலுள்ள குறைபாடாகும். (மாதவிடாய் ஏற்படும்) பல நாட்கள் அவள் தொழாமல் இருந்துகொண்டிருக்கிறாள்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்கிறாள். இதுதான் (அவளுடைய) மார்க்கத்திலுள்ள குறைபாடு" என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

திருக்குர்ஆன் கேள்வி பதில்

 திருக்குர்ஆன் கேள்வி பதில்

ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்?

! நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62)

ஸாலிஹ் (அலை) அவர்களின் கூட்டத்தினர் எவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள்?

! பெரும் சப்தத்தால் (அல்குர்ஆன் 11:67)

உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும் கையேந்த மாட்டேன் என்று சத்தியமிட்ட நபித்தோழர் யார்?

! ஹகீம் பின் ஹிஷாம் (ரலி) (ஆதாரம் : புகாரி 2750)

தம்மிடம் வந்த வானவர்களுக்கு எந்த விருந்து வைத்தார்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்?

! பொரித்தக் கன்றை கொடுத்தார்கள் (அல்குர்ஆன் 11:69)

பணியாளன் எதற்கு பொறுப்பாளி?

! தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளனாவான். (ஆதாரம் : புகாரி 2751)

வானவர்களை மனித தோற்றத்தில் கண்ட நபி இப்ராஹீம் (அலை) என்ன ஆனார்கள்?

! பயந்துவிட்டார்கள் (அல்குர்ஆன் 11:70)

தோட்டத்தை தர்மம் செய்து தன் தாயின் நன்மைக்கு வழிவகுத்தவர் யார்?

! ஸஅத் பின் உபாதா (ரலி) (ஆதாரம் : புகாரி 2756)

இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வந்த வானவர்கள் என்ன சொன்னார்கள்?

! நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற நற்செய்தியை கூறினார்கள். (அல்குர்ஆன் 11:71)

தனக்கு மிகவும் விருப்பமான பைருஹா எனும் தோட்டத்தை தர்மம் செய்தவர் யார்?

! அபூதல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2758)

நற்செய்தி கேட்ட நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி என்ன கூறினார்கள்?

! "இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும்,இதோ எனது கணவர்

கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா?

! இது வியப்பான செய்திதான்'' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 11:72)

நபி (ஸல்) அவர்கள் ஓய்வு எடுக்கும் தோட்டம் எது?

! பைருஹா தோட்டம் (ஆதாரம் : புகாரி 2758)

இப்ராஹீம் (அலை) அவர்களின் குணம் எப்படி?

! சகிப்புத் தன்மை மிக்கவராகவும்,இரக்கமுள்ளவராகவும் இருந்தார்கள். (அல்குர்ஆன் 11:75)

அனஸ் (ரலி) அவர்கள், நபிகளாருக்கு பணிவிடை செய்யச் சொன்னவர் யார்?

! அபூ தல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2768)

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்த மக்களிடம் நபி லூத் அவர்கள் என்ன கேட்டார்கள்?

! உங்களில் நல்ல ஓர் ஆண் மகன்கூட இல்லையா? என்று கேட்டார்கள். (அல்குர்ஆன் 11:78)

மஸ்ஜித் நபவி இருக்கும் இடம் எந்த குலத்தைச் சார்ந்தவர்களுக்கு சொந்தமானது?

! பனூ நஜ்ஜார் (ஆதாரம் : புகாரி 2774)

லூத் (அலை) அவர்களின் சமூகத்தினர் எவ்வாறு அழிக்கப்பட்டனர்?

! சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து,அதன் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக ஆகப்பட்டது. (அல்குர்ஆன் 11:82)

ரூமா என்ற கிணறை விலைக்கு வாங்கி தூர் வாரி மக்களுக்கு தர்மம் செய்தவர் யார்?

! உஸ்மான் (ரலி) (ஆதாரம் : புகாரி 2778)

ஷுஐப் (அலை) அவர்கள் எந்த நகருக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்?

! மத்யன் (அல்குர்ஆன் 11:84)

பெண்களுக்குரிய சிறந்த அறப்போர் எது?

! பாவம் கலவாத ஹஜ் (ஆதாரம் : புகாரி 2784)

ஷுஐப் (அலை) அவர்கள் கூட்டத்தினர் வியாபாரத்தில் என்ன தவறு செய்தார்கள்?

! அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்தனர். (அல்குர்ஆன் 11:85)

ஜிஹாத்திற்கு நிகரான நற்செயல் எது?

! எதுவும் இல்லை (ஆதாரம் : புகாரி 2785)

தொழுகை எதை கட்டளையிடுவதாக ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தினர் கூறினர்?

! எங்கள் முன்னோர்கள் வணங்கியதையும்,எங்கள் பொருட்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும் விட்டுவிட கட்டளையிடுகிறதா? (அல்குர்ஆன் 11:87)

! வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட ஆலயம் எது?

பைத்துல் மஃமூர் (ஆதாரம் : புகாரி 3207)

ஷுஐப் (அலை) அவர்களின் போதனைப் பற்றி அவர்களின் கூட்டத்தினர் என்ன கருத்து கூறினர்?

! நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரியவில்லை. எங்களில் பலவீனராகவே உம்மை நாங்கள் கருதுகிறோம். (அல்குர்ஆன் 11:91)

சொர்க்கத்தின் மிகச்சிறந்த சொர்க்கம் எது?

! பிர்தவ்ஸ் (ஆதாரம் : புகாரி 2790)

உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம் என்று கூறியதற்கு ஷுஐப் (அலை) அவர்கள் என்ன பதிலளித்தார்கள்?

! "என் சமுதாயமே! என் குலத்தவர் அல்லாஹ்வைவிட உங்களுக்கு மதிப்பு மிக்கவர்களா? (அல்குர்ஆன் 11:92)

சொர்க்கத்தில் ஒரு வில்லுக்கு சமமான இடம் கிடைப்பது?

! உலகத்தைவிட சிறந்தது (ஆதாரம் : புகாரி 2793)

ஏழ்மையின் சிறப்பு

عَنْ أَبِي سَعِيدٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: اَللّهُمَّ أَحْيِنِي مِسْكِيناً، وَتَوَفَّنِي مِسْكِيناً، وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ.
(الحديث) رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٤ /٣٢٢
8.”யாஅல்லாஹ், என்னை ஏழைகளின் சுபாவத்தில் வாழவைப்பாயாக! ஏழ்மையான நிலையில் உலகிலிருந்து என்னை மரணிக்கச் செய்வாயாக! ஏழைகளின் கூட்டத்தில் என்னை எழுப்புவாயாக!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)

நேர்வழியைக் கொடுத்து இந்த மார்க்கத்தில் உயர் நிலையை வழங்குவான்.

நேர்வழியைக் கொடுத்து இந்த மார்க்கத்தில்
உயர் நிலையை வழங்குவான்.

இறைநிராகரிப்பில் இருக்கும் போது இஸ்லாத்தை வீழ்த்த வேண்டும், முஸ்லிம்களை கொன்றொழிக்க வேண்டும், மாநபி {ஸல்} அவர்களை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று வீறு நடை போட்டு, பல யுத்தங்களுக்கு தளபதிகளாய், வழிகாட்டிகளாய், மதியூகிகளாய் விளங்கிய அபூ சுஃப்யான், காலித் இப்னு வலீத், ஸுஹைல் இப்னு அம்ர், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமைய்யா, உமர் போன்றோர்களுக்கு ஈமானை வழங்கி சான்றோர்களாய் மாற்றினான் அல்லாஹ்.

فقال عكرمة
رضيت يا رسول الله ، لا أدع نفقة كنت أنفقها في صدٍ عن سبيل الله إلا أنفقتُ ضعفها في سبيل الله ، ولا قتالا كنت أقاتل في صد عن سبيل الله إلا أبليت ضعفه في سبيل الله .. ثم اجتهد في القتال حتى قتِل شهيدا (أي في يوم اليرموك) .. وبعد أن أسلم رد رسول الله - صلى الله عليه وسلم - امرأته له بذلك النكاح الأول .." .

இதோ, பெருமானார் {ஸல்} அவர்கள் முன் நின்று கலிமாவை மொழிந்து, மனம் உருகிப் பேசிய இக்ரிமா {ரலி} அவர்கள்:   “ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன்.

இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.” என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு நேரத்தோடு செல்வதன் சிறப்பு

வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) நேரத்தோடு செல்வதன் சிறப்பு
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ، قَالَ أَبُو الطَّاهِرِ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو عَبْدِ اللَّهِ، الأَغَرُّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلاَئِكَةٌ يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوُا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي الْبَدَنَةَ ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي الْكَبْشَ ثُمَّ كَالَّذِي يُهْدِي الدَّجَاجَةَ ثُمَّ كَالَّذِي يُهْدِي الْبَيْضَةَ».1554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமையின் சிறப்பு.

🌻🌻🌻வெள்ளிக்கிழமையின் சிறப்பு.🌻🌻🌻                                                
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، - يَعْنِي الْحِزَامِيَّ - عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ  " خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُخْرِجَ مِنْهَا وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ فِي يَوْمِ الْجُمُعَةِ " .1548. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Friday, 9 June 2017

நம்மைச் சார்ந்தவர்அல்லன்

நம்மைச் சார்ந்தவர்அல்லன்

وَحَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - قَالَ أَخْبَرَنِي الْعَلاَءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، . أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلاً فَقَالَ " مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ " . قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَىْ يَرَاهُ النَّاسُ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي " 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.
(நூல்-முஸ்லிம்- 164)

Thursday, 8 June 2017

மன நிறைவான, நிம்மதியான வாழ்விற்கு….

மன நிறைவான, நிம்மதியான வாழ்விற்கு….

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ - وَاللَّفْظُ لِشَيْبَانَ - حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

சுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறை நம்பிக்கையாளனின் நிலை வியப்பிற்குரியது! அவன் எந்த நிலையிலிருந்தாலும் அதனால் நன்மைகளையே குவிக்கின்றான். இந்த நற்பேறு இறை நம்பிக்கையாளனைத் தவிர வேறு யாருக்கும் வாய்ப்பதில்லை. அவன் வறுமை, நோய், துன்பம், சோதனை ஆகிய நிலைகளின் போது பொறுமையைக் கைகொள்கிறான். மகிழ்ச்சியான தருணங்களில், அவன் விரும்பியவை நடக்கிற போது இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றான். இந்த இரண்டு நிலைகளுமே அவனுக்கு நன்மைக்கான காரணங்களாக அமைகின்றன” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

 ( நூல்: முஸ்லிம் )

மதுவின் தீமையும்... தண்டனையும்...

மதுவின் தீமையும்... தண்டனையும்...

روى البيهقي بإسناد صحيح عن عثمان بن عفان أنه قال
فاجتنبوا الخمر فإنها لا تجتمع هي والإيمان أبداً إلا أوشك أحدهما أن يخرج صاحبه

உஸ்மான் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“மது அருந்துவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்; ஏனெனில், அது அனைத்து வகையான பாவங்களுக்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறை நம்பிக்கையும், மது அருந்துவதும் ஒரு மனிதனிடத்தில் ஒரு போதும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்றை மற்றொன்று அகற்றிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                ( நூல்: நஸாயீ )

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நிரந்தரமாக மது அருந்திய நிலையில் மரணிப்பவன் சிலை போன்று எழுப்பப்படுவான்” என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
                     
                      ( நூல்:ஸில்ஸிலா அஸ் ஸஹீஹ்,ஹ.எண்:677. )

جاء في سنن ابن ماجه عن عبد الله بن عمرو بن العاص أن النبي قال
 مَنْ شَرِبَ الْخَمْرَ وِسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صلاةٌ أَرْبَعِينَ صَبَاحاً. وَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ. فَإِنْ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ. وَإِنْ عَادِ فَشَرِبَ فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صلاةٌ أَرْبَعِينَ صَبَاحاً. فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ. فَإِنْ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ. وَإِنْ عَادَ فَشَرِبَ فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صلاةٌ أَرْبَعِينَ صَبَاحاً. فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ. فَإِنْ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ. وَإِنْ عَادِ ـ أي في الرابعة ـ كَانَ حَقّاً عَلَى اللهِ أَنْ يَسْقِيَهُ مِنْ رَدْغَةِ الْخَبَالِ يَوْمَ الْقِيَامَةِ
قَالُوا: يَا رَسُولَ اللهِ! وَمَا رَدْغَةُ الْخَبَالِ قَال
 ((عُصَارَةُ أَهْلِ النَّارِ))

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்:

“மது அருந்தி போதையில் திளைத்தவனின் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது. அவன் அதே நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான். அதன் பிறகும் மது போதையில் திளைத்தால் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது; அவன் மரணித்தால் நரகம் புகுவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான். 
                 
      இதன் பிறகும் அவன் அந்த இழிச் செயலை தொடர்வானேயானால், அவனுக்கு மறுமையில் “ரத்ஃகத்துல் ஃகிபாலை” குடிக்க வைப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது”.               
                 
அப்போது, நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! ”ரத்ஃகத்துல் ஃகிபால்” என்றால் என்ன? என்று வினவினார்கள்.               
                 
அதற்கு நபி {ஸல்} அவர்கள் “அது நரக வாசிகளின் சீழ், சலம் ஆகும்” என்றார்கள்.
                       ( நூல்:ஷரஹுஸ் ஸுன்னா, பாகம்:6, பக்கம்:118 )

      அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் {ரலி} அறிவிக்கின்றார்கள்:

“மது அருந்துபவர்கள் நோயுற்றுவிட்டால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
       
                     ( நூல்:தஃக்லீக் அத் தஃலீக் லி இப்னி ஹஜர்,பாகம்:5,பக்கம்:126. )

في سنن أبي داود من طريق ابن عمر
 لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه وآكل ثمنها

அப்துல்லாஹ் இப்னு உமர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“மது சம்பந்தமாக பத்து நபர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபித்தார்கள்: 1. மதுவைக் தயாரிப்பவர். 2. தயாரிக்க உதவுபவர். 3. அதைக் குடிப்பவர். 4. அதனை ஊற்றிக் கொடுப்பவர். 5. அதனைச் சுமந்து செல்பவர். 6. அதற்கு துணை போனவர். 7. அதனை விற்பவர். 8. அதனை வாங்குபவர். 9. அதனை அன்பளிப்புச் செய்பவர். 10. அதை விற்பனை செய்பவர்.”
          
                       ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ லில் அல்பானீ, ஹ.எண்:5091 )

மறுமை நாளில் அல்லாஹ் பேசாத நபர்கள்

மறுமை நாளில் அல்லாஹ் பேசாத நபர்கள்



حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ " قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مِرَارٍ . قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ "

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்: 1. செய்த தருமத்தைச் சொல்லிக் காட்டுபவர். அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்கமாட்டார். 2. பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர். 3. தமது கீழங்கியை (கணுக் காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவர்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்-முஸ்லிம் 171)

நபிமொழிகள்



 ஒருவர் நான் தர்மம்
செய்யப் போகிறேன் என கூறிக்கொண்டு இரவில் தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்) ஒரு திருடனிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு திருடனுக்கு தர்மம் வழங்கப் பட்டுள்ளது'' என்று கூறினர். (இதைக் கேட்ட) அவர் "அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும் (நாளை) நான் தர்மம் செய்வேன்'' என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் வெளியே வந்து ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். மறுநாள் காலை மக்கள் "இன்றிரவு விபச்சாரிக்கு தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது'' என பேசிக் கொண்டனர். அதற்கு அவர் "அல்லாஹ்வே! விபச்சாரிக்கு தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்'' என்று கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளியே வந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்து விட்டார். காலையில் மக்கள் "பணக்காரருக்கு தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது'' என பேசிக் கொண்டனர். உடனே அவர் "அல்லாஹ்வே! திருடனிடமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்'' எனக் கூறினார். அப்போது ஒருவர் அவரிடம் வந்து "நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதை விட்டுத் திருந்தக் காரணமாகலாம். நீர் விபச்சாரிக்குக் கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகலாம். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்'' என்று கூறினார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 1421

செயல்கள் எண்ணங்களைக் கொண்டு தான் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும். யாருடைய (நாட்டை விட்டு வெளியேறும்) பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைகின்றதோ அவரது பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைந்து விடுகிறது. எவரது பயணம் உலகத்தை அடைவதற்காகவோ அல்லது பெண்களை மணம் முடிப்பதற்காகவோ அமையுமெனில் அவரது பயணம், அவர் எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்தாரோ அதற்காகவே அமைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்: புகாரி 1


தாயத்து ஆபத்து

" தாயத்து " ..............
 நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், “ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவரிடத்தில் தாயத்து இருக்கிறது” என்று சொல்லி தன்னுடைய கையை நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர், ” யார் தாயத்தைத் தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் ” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹ்மத் 16781.

நமக்குச் சொந்தமானதை அடுத்தவர் அபகரிக்க முயன்றால்…

நமக்குச் சொந்தமானதை அடுத்தவர் அபகரிக்க முயன்றால்…
‎حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرٍ، ثنا أَحْمَدُ بْنُ مَهْدِيٍّ، ثنا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ، ثنا سُلَيْمَانُ بْنُ بِلالٍ، ثنا الْعَلاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ : أَرَأَيْتَ إِنْ جَاءَنِي رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي قَالَ لا تُعْطِهِ مَالَكَ قَالَ أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِيقَالَ فَقَاتِلْهُ قَالَ أَفَرَأَيْتَ إِنْ قَتَلَنِي قَالَ فَأَنْتَ شَهِيدٌ قَالَ أَفَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ قَالَ هُوَ فِي النَّارِ
ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻜﺒﺮﻯ ﻟﻠﻨﺴﺎﺋﻲ 449
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தோடு ஒருவன் வந்தால் (நான் செய்ய வேண்டியது) என்னவெனக் கூறுங்கள்” என்று கேட்டார். “அவனுக்கு உமது செல்வத்தை(விட்டு)க் கொடுத்து விடாதே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “அவன் என்னுடன் சண்டையிட்டால்..?” என்று அவர் கேட்டார். “நீயும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்று விட்டால்..?” என்று அவர் கேட்டார். “நீ உயிர்தியாகி (ஷஹீத்) ஆகிவிடுவாய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “நான் அவனைக் கொன்று விட்டால்?” என்று அவர் கேட்டார். அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸாயீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 449

இவ்வுலகிலுள்ள சொர்க்க நதிகள்

இவ்வுலகிலுள்ள சொர்க்க நதிகள்

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ سَيْحَانُ وَجَيْحَانُ وَالْفُرَاتُ وَالنِّيلُ كُلٌّ مِنْ أَنْهَارِ الْجَنَّةِ ‏"‏ ‏.‏5461. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சைஹான், ஜைஹான், ஃபுராத், நீல் ஆகியவை சொர்க்க நதிகளில் உள்ளவையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது அவர்கள் மீது கடமையாகும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ سُلَامَى مِنْ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ وَيُمِيطُ الْأَذَى عَنْ الطَّرِيقِ صَدَقَةٌ
 رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும்.
ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தர்மமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும்.
நல்ல (இனிய) சொல்லும் ஒருதர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரி (2989)

தொழுகை

1373حَدَّثَنِي أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو عَمَّارٍ وَيَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ عِكْرِمَةُ وَلَقِيَ شَدَّادٌ أَبَا أُمَامَةَ وَوَاثِلَةَ وَصَحِبَ أَنَسًا إِلَى الشَّامِ وَأَثْنَى عَلَيْهِ فَضْلًا وَخَيْرًا عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ عَمْرُو بْنُ عَبَسَةَ السُّلَمِيُّ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ أَخْبِرْنِي عَمَّا عَلَّمَكَ اللَّهُ وَأَجْهَلُهُ أَخْبِرْنِي عَنْ الصَّلَاةِ قَالَ صَلِّ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْصِرْ عَنْ الصَّلَاةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَتَّى تَرْتَفِعَ فَإِنَّهَا تَطْلُعُ حِينَ تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ ثُمَّ صَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ حَتَّى يَسْتَقِلَّ الظِّلُّ بِالرُّمْحِ ثُمَّ أَقْصِرْ عَنْ الصَّلَاةِ فَإِنَّ حِينَئِذٍ تُسْجَرُ جَهَنَّمُ فَإِذَا أَقْبَلَ الْفَيْءُ فَصَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ ثُمَّ أَقْصِرْ عَنْ الصَّلَاةِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ فَإِنَّهَا تَغْرُبُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ قَالَ رواه مسلم

"நான் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் தொழுகையைப்
பற்றி எனக்குச் சொல்லுங்கள்!''
என்று கேட்டேன்.
அதற்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்,
"சுப்ஹுத் தொழுகையைத்
தொழுங்கள்.
பிறகு சூரியன் உதயமாகி
உயரும்வரை தொழுவதை
நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஏனெனில்,
அது உதயமாகும் போது
ஷைத்தானின்
இரு கொம்புகளுக்கிடையே
உதயமாகிறது.
அப்போது தான் அதற்கு இறை மறுப்பாளர்கள் சிரம் பணிகின்றனர்.
அதன் பிறகு தொழுங்கள்!
அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக் கூடியதும் (வானவர்கள்)
வருகை தரக்கூடியதுமாகும்.
அப்போது முதல் ஈட்டியின்
நிழல் கிழக்கிலோ மேற்கிலோ
சாயாமல் அதன்மீதே விழும் வரை (நண்பகல் வரை) தொழுங்கள்!
பிறகு தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஏனெனில்,அப்போது நரகம் எரிக்கப்படுகிறது.
பிறகு நிழல் (கிழக்கே)
சாய்ந்துவிட்டால் தொழுங்கள்.
அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது.
அவர்கள் அதில் பங்கேற்கின்றனர்.
பிறகு அஸ்ர் வரை தொழுங்கள்.
பிறகு சூரியன் மறையும் வரை தொழுவதை நிறுத்திவிடுங்கள்!
ஏனெனில்,
அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே தான்
மறைகிறது.
இந்த நேரத்தில் அதற்கு
இறை மறுப்பாளர்கள் சிரம் பணிகின்றனர்''என்று
கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அபசா (ரலி)
நூல் : முஸ்லிம் (1512)

இறை மறுப்பாளர்கள்
இந்த நேரங்களில் சூரியனுக்கு
சஜ்தாச் செய்யும் நடைமுறை
உள்ளது.
இந்த நேரத்தில் நாம்
தொழுதால் நாமும்
சூரியனுக்கு சஜ்தா செய்வதைப்
போன்ற தோற்றம் ஏற்படும்.

இறை மறுப்பாளர்களுக்கு
மாறு செய்ய வேண்டும்
என்ற காரணத்துக்காகவே
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்.

குறிப்பிட்ட இந்த
மூன்று நேரங்களில்
தொழுவதை மட்டுமே நபி
(ஸல்) அவர்கள் தடை
செய்துள்ளார்கள்.
இதே நேரங்களில்
திருமணம் போன்ற நல்ல
காரியங்களைச் செய்ய
எந்தத் தடையுமில்லை.

எனவே இந்தச் செய்தியில்
நல்ல நேரம் கெட்ட நேரம்
பார்க்கலாம் என்ற கருத்து
நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறப்படவில்லை.

நபிமொழி


 بسم الله الرحمان الرحيم

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்.
1. நீதமிகு தலைவர்
2. அல்லாஹ்வை வணங்கியே தனது இளமையை கழித்த வாலிபர்
3. மஸ்ஜித்களுடன் இதய பூர்வத் தொடர்பு கொண்ட மனிதர்.
4. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.
5. அழகும், கவர்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்று கூறி மறுத்த மனிதன்.
6. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு (இரகசியமாக) செலவு செய்யும் மனிதன்.
7. தனிமையில் இறையச்சத்தின் காரணமாக அழும் மனிதன்.
(நூல்: புகாரி 6806)


ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்குப் பிறகு ( வேறுயாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டார். அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி ( அதில்) நிலைத்து நில் ! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே நான் எதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ? என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் நாவை சுட்டிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : அஹ்மத்(14870)

இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.

இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
=======================
⭕பெருமானார் (ஸல்) அவர்களின்
மனைவிமார்கள்.
1 . அன்னை கதிஜா (ரலி)
2 . அன்னை சவுதா (ரலி)
3 . அன்னை ஆயிஷா (ரலி)
4 . அன்னை ஹப்ஸா (ரலி)
5 . அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா (ரலி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித் (ரலி)
8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ் (ரலி)
9 . அன்னை ஹபீபா (ரலி)
10 . அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி).

⭕பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகள்.
பெண் மக்கள்
1 . ஜைனப் (ரலி)
2 . ருகையா (ரலி)
3 . .:பாத்திமா (ரலி)
4 . உம்மு குல்தூம் (ரலி).

ஆண் மக்கள்.
1 . காஸிம்(ரலி)
2 . அப்துல்லாஹ் (ரலி)
3 . இப்ராஹீம் (ரலி).

⭕நீதி நபி (ஸல்) அவர்களின்
நிர்வாகஸ்தர்கள்.

1 . அப்துர் ரஹ்மான் இப்னு அவ்.:ப்
(ரலி)
2 . பிலால் (ரலி)
3 . அஸத் இப்னு உஸைத் (ரலி)
4 . முஐகீப் (ரலி).

⭕கவிஞர்கள்.
1 . ஹஸ்ஸான் இப்னு ஸாபித்( ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி)
3 . க.:ப் இப்னு மாலிக் (ரலி).

⭕முஅத்தினாக நியமனம் செய்யப்பட்டநான்கு பேர்கள்.
1 . பிலால் (ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி)
3 . ஸ.:துல்கர்ள் (ரலி)
4 . அபூ மஹ்தூரா (ரலி).

⭕பணியாளர்கள் ஆண்கள்.
1 . அனஸ் இப்னு மாலிக் (ரலி)
2 . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
3 . உக்த் இப்னு ஆமிர் (ரலி)
4 . அஸ்க.: இப்னு ஷரீக் (ரலி).

⭕பெருமானார் (ஸல்)அவர்களின்
குதிரைகள்
ஒட்டகங்கள்.
1 . ஸக்ப்
2 . முர்தஜிஸ்
1 . கஸ்வா
3 .லஹீ.:ப்
2 . ஜத்ஆ.:
4 .லிஜாஜ்
3 . ஆழ்பா.:
5 . ளரி.:ப்
6 . வர்த்
7 . ஸப்ஹா
8 . ய.:சூப்

⭕ஈகை நபி(ஸல்) அவர்களின் ஈட்டிகள்
1 . பைளா.
1 . முஸ்னா.
2 . ரவ்ஹா.
2 . முஸ்வீ
3 . ஸ.:ப்ரா
4 . ஜவ்ரா.
5 . சதாத்.

⭕இஸ்லாமிய போர்.
போரின் பெயர்
பிறை ஹிஜ்ரி.
1 . பத்ரு போர் ரமலான்01
2 .உஹது போர் ஷவ்வால் 03
3 . சவீக்சண்டை ஷவ்வால் 03
4 . பனு முஸ்தலிக் போர் ஷ.:பான் 05
5 . அஹழ் போர் ஷ.:பான் 05
6 . கைபர் போர் ஷ.:பான் 07
7 . மூத்தாப் போர் ஷ.:பான் 07
8 . மக்கா வெற்றி ஷவ்வால் 08
9 . ஹூனைன் போர் ஷவ்வால் 09
10 . தபூக் போர் ரஜப் 09
11 . தாயிப் போர்.

⭕நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதம்
பற்றி நபிமார்கள் வேதம் பாஷை.

🔘மூஸா (அலை)
தவ்ராத் இப்ரானி.

🔘தாவூத் (அலை)
ஸபூர் யூனானி.

🔘ஈஸா (அலை)
இன்ஜீல் ஸூர்யானி.

🔘முஹம்மது (ஸல்)
குர்ஆன் அரபி.

⭕க.:பா கட்டுவதற்கு கல்
எடுக்கப்பட்ட மலைகள்.
1 . ஜபலே தூர்ஸீனா
2 . ஜபலே தூர்ஜீனா
3 . ஜபலே தூர்லப்னான்
4 . ஜபலே தூர்ஜூத்
5 . ஜபலே ஹிரா.

கட்டியவர் : இப்ராஹீம் (அலை) ,
இஸ்மாயில் (அலை).

⭕மனிதனின் அந்தஸ்துகள் (தரஜாக்கள் )
முதலில் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.
1 . மனிதன்
2 . முஸ்லிம்
3 . மு.:மின்
4 . ஸாலிஹ்
5 . முத்தகீன்
6 . வலியுல்லாஹ்
7 . நுகபா
8 . நுஜபா
9 . அப்தால்
10 . அக்யார்
11 . ஆரி.:பீன்
12 . அன்வார்
13 . அவ்தாத்
14 . முக்தார்
15 . இமாமனி
16 . குதுப்
17 . தாபியீ
18 . சஹாபி
19 . அன்சாரி
20 . முஹாஜிரி
21 . ஷஹீத்
22 . சித்திக்
23 . நபி
24 . ரஸூல்
25 . உலுல் அஜ்ம்
26 . கலீலுல்லாஹ்
27 . உலக முழுமைக்கும் ரஸூல்
28 . காத்தமுன் நபி
29 . ரஹ்மத்தில் ஆலமீன்
30 . ஹபீபுல்லாஹ்.

⭕நபிமார்கள் மொத்தம் - 1 24 000 மேற்பட்டவர்கள் .
ரஸூல்மார்கள் -
313 பேர்.
குர்ஆனில் சொல்லப்பட்ட
நபிமார்கள்
- 25 பேர்.
313 பேரில் உலுல் அஜ்ம் -5 பேர்.

1 . நூஹ் (அலை)
2 . இப்ராஹீம் (அலை)
3 . மூஸா (அலை)
4 . ஈஸா (அலை)
5 . முஹம்மது ரஸூல் (ஸல்).
திருக்குர்ஆனின் வசனம் - 6666
சொற்கள் - 75430
எழுத்துக்கள் - 326671.

⭕சுவர்க்கத்தின் பெயர்கள்.
1 . தாருல் மகாம்
2 . தாருல் ஸலாம்
3 . ஜன்னத்துல் ம.:வா
4 . ஜன்னத்துல் நயீம்
5 . ஜன்னதுல் .:பிர்தெளஸ்
6 . ஜன்னத்துல் அத்னு
7 . இல்லியூன்
8 . ரைய்யான்.

⭕நான்கு வகை உயிர்கள்.
1 . ரூஹுல் ஜிமாத் -ஜடப்பொருள்
2 . ரூஹுல் நபாத்து - தாவர உயிர்
3 . ரூஹுல் ஹைவான் - பிராணி உயிர்
4 . ரூஹுல் இன்சான் - மனித உயிர்.

⭕நப்ஸின் ஏழு வகைகள்.
1 . நப்ஸ் அம்மாரா
2 . நப்ஸ் லவ்வாமா
3 . நப்ஸ் முத்மாயின்னா
4 . நப்ஸ் முல்ஹிமா
5 . நப்ஸ் ராலிய்யா
6 . நப்ஸ் மர்லிய்யா
7 . நப்ஸ் காமிலா.

⭕மனித உள்ளத்தில் ஏழு பாகங்கள்.
1 . தபக்கஹூத்துஸ் தூர்
2 . தபக்கத்துல் கல்பி
3 . தபக்கத்துஷ் ஷிகாப்
4 . தபக்கத்துல் .:புஆத்
5 . தபக்கத்து ஹூப்பத்துல்கல்லி
6 . இல்முல்லதுன்னி
7 . தபக்கத்த.

அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள்...

நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..

அனைத்து துன்பங்களின் போதும் ஓதும் துஆ

அனைத்து துன்பங்களின் போதும் ஓதும் துஆ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்புல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லாஹூ ரப்புஸ் ஸமாவா(த்)தி வரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்.

பொருள் : கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.

ஆதாரம் :  புகாரி 6345, 6346, 7431, முஸ்லிம் 4909

நபி (ஸல்)அவர்களின் கோபத்திற்க்கு ஆளானவர்கள் பித்அத் வாதிகள்...

நபி (ஸல்)அவர்களின் கோபத்திற்க்கு ஆளானவர்கள் பித்அத் வாதிகள்...
بسم الله الرحمان الرحيم

 عن سهل ابن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم : إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم بظمأْ أبدا ليردن علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال  بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدرى ما أحدك فأقول سحقاً سحقاً لمن غير بعدي
(متفق عليه)
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
கவ்தர் தடாகத்தின் முன்பாக நான் தான் முதல் ஆளாக நின்று கொண்டிருப்பேன். யார் யாரெல்லாம் அங்கு வருகை தருகின்றார்களோ அவர்களெல்லாம் அதில் நீர் அருந்துவார்கள்,

 யாரெல்லாம் அங்கு ஒரு முறை வந்து நீர் அருந்தினார்களோ அவர்களுக்கு இனி எப்பொழுதும் தாகம் எடுப்பதை உணரவே மாட்டார்கள். அப்பொழுது சில பேர் அங்கு வருவார்கள். அவர்கள் என்னைப் பின்பற்றியவர்கள் என்பதையும் நான் கண்டு கொள்வேன்.
அவர்களும் என்னை நபி எனக் கண்டு கொள்வார்கள். ஆனால் அவர்கள் என்னை நெருங்கி வருவதனின்றும் (மலக்குகளால்)  தடுக்கப்படுவார்கள்.
அப்பொழுது நான் அவர்கள் என்னுடைய சமுதாயத்தவர்கள் அல்லவா! என்னைப் பின்பற்றியவர்கள் அல்லவா! எனக் கூறுவேன். நபி முஹம்மது (ஸல்) அவர்களே உங்களுக்குப் (மரணித்த) பின்பு இவர்கள் என்னென்ன புதினங்களை உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள், என்று எனக்கு அறிவித்துக் கொடுக்கப்படும்.அதன் பிறகு நான் கூறுவேன், தூரப் போய் விடுங்கள் !! எனக்குப் பின்பு மார்க்கத்தில் புதினங்களைப் புகுத்தியவர்களுக்கும் எனக்கும் தூரம் இருப்பதே சிறந்தது எனக் கூறுவேன்,  சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்:புகாரி.முஸ்லிம்

அல்லாஹ் (தஆலா) பித்அத் வாதிகளுடைய பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்வதில்லை.

அல்லாஹ் (தஆலா) பித்அத் வாதிகளுடைய பாவ மன்னிப்பை  ஏற்றுக் கொள்வதில்லை.

عن أنس بن مالك رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم : إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع تدعته ( رواه اطبراني)

(மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை) யார் புகுத்தினாரோ அவரது அந்தச் செயலிலிருந்து அவர் விடுபடாதவரை அவரது பாவ இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை, என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்:தப்ரானி

பித்அத் செயலுக்கு என்னை அழைக்காதீர்கள்...

பித்அத் செயலுக்கு என்னை அழைக்காதீர்கள்...

 عَنِ الْحَسَنِ قَالَ دُعِيَ عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ إِلَى خِتَانٍ فَأَبَى أَنْ يُجِيبَ فَقِيلَ لَهُ فَقَالَ إِنَّا كُنَّا لَا نَأْتِي الْخِتَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نُدْعَى لَهُ
ஹஜ்ரத் உஸ்மானிப்னு
அபில் ஆஸ் (ரலி) அவர்களை ஒருவர் கத்னாவிற்காக அழைத்தார். அதை ஏற்க மறுத்துவிட்டு கூறினார்கள். நபி(ஸல்) காலத்தில் கத்னாவிற்காக அழைப்பு கொடுக்கப்பட்டதுமில்லை.
அதிலே நாங்கள் கலந்து கொள்ளவுமில்லை.
நூல் : அஹ்மத் ஹதீஸ் எண். 17232

நபியின் முன்னறிவிப்பு.

நபியின் முன்னறிவிப்பு.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْ السَّاعَةِ تَسْلِيمُ الْخَاصَّةِ وَتَفْشُو التِّجَارَةُ حَتَّى تُعِينَ الْمَرْأَةُ زَوْجَهَا عَلَى التِّجَارَةِ وَتُقْطَعُ الْأَرْحَامُ

கியாமத் நிகழ்வதற்கு முன்.குறிப்பிட்டவருக்கு மட்டும் ஸலாம் சொல்வது. வியாபாரம் பெருகுவது எந்த அளவென்றால் ஒரு பெண் தன் கணவனுடைய வியாபாரத்திற்கு உதவிடுவாள். உறவு துண்டிக்கப்படுவது. போன்ற செயல்கள் ஏற்படும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

நூல்; அஹ்மத்.

அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள்.




 أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمْ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنْ اللَّهِ تَعَالَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ قَالَ هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ وَقَرَأَ هَذِهِ الْآيَةَ
{ أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ }

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சஹாபாக்கள், அவர்கள் யார்? என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த  பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி)

  நூல் .அபூதாவூத் 3060)

பெரியவர்களை கண்ணியப்படுத்துதல்.

பெரியவர்களை கண்ணியப்படுத்துதல்.

وعن أنس قال : قال رسول الله صلى الله عليه وسلم : " ما أكرم شاب شيخا من أجل سنه إلا قيض الله له عند سنه من يكرمه " . رواه الترمذي

அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்)கூறியதாக.

எந்த வாலிபர் தன்னை விட வயது முதிர்ந்த பெரியவரை கண்ணியப்படுத்துகின்றானோ அவ்வாழிபருக்கு வயோதிகம் வரும்போது அல்லாஹ் அவனுக்கு கண்ணியம் செய்யக்கூடியவர்களை ஏற்படுத்துவான்...

நூல். திர்மிதி

பெண்கள் கவர்ச்சியோடு வீதிகளில் கடைத்தெருக்களில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது...

بسم الله الرحمان الرحيم

நோன்பு காலங்களில் பெண்கள் கவர்ச்சியோடு வீதிகளில் கடைத்தெருக்களில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது...

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ

நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.
(அல்குர்ஆன்:33--33)

அல்லாஹ்வை நினைவு கூர்வோம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ  صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَا وَاللَّهِ مَا رَأَوْكَ قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًاوَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنَ النَّارِ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنَ الْمَلَائِكَةِ فِيهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ هُمُ الْجُلَسَاءُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ " ] أخرجه البخاري [ .-------------------------------------------          6408. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் “உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்“ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?“ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்“ என்று வானவர்கள் கூறுகின்றனர்.  அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?“ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை“ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?“ என்று கேட்பான். வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்“ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?“ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்“ என்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?“ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை“ என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?“ என்று கேட்பான். வானவர்கள், “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்“ என்று பதிலளிப்பார்கள்.  இறைவன், “அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?“ என்று வினவுவான். வானவர்கள், “நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)“ என்று பதிலளிப்பார். இறைவன், “அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?“ என்று கேட்பான். வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை“ என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?“ என்று கேட்பான் வானவர்கள், “நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்“ என்பர். அப்போது இறைவன், “எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்“ என்று கூறுவான்.  அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்“ என்பார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்“ என்று கூறுவான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது. 
ஷஹீஹ் புகாரி 6408

Wednesday, 7 June 2017

தொழுகை...

  1. தொழுகை

  2. حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي عَنْ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي عِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ قَالَ صَلَّيْتُ الظُّهْرَ فِي بَيْتِي ثُمَّ خَرَجْتُ بِأَبَاعِرَ لِي لِأُصْدِرَهَا إِلَى الرَّاعِي فَمَرَرْتُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي بِالنَّاسِ الظُّهْرَ فَمَضَيْتُ فَلَمْ أُصَلِّ مَعَهُ فَلَمَّا أَصْدَرْتُ أَبَاعِرِي وَرَجَعْتُ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي مَا مَنَعَكَ يَا فُلَانُ أَنْ تُصَلِّيَ مَعَنَا حِينَ مَرَرْتَ بِنَا قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ كُنْتُ صَلَّيْتُ فِي بَيْتِي قَالَ وَإِنْ رواه أحمد

  3. பனூ தைல் குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :

  4. நான் என்னுடைய வீட்டில் தொழுது விட்டு எனது கால்நடைகளை மேய்ப்பாளரிடம் ஒப்படைப்பதற்காக அவற்றுடன் வெளியே சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் தொழாமல் கடந்து சென்று விட்டேன். எனது கால்நடைகளை மேய்க்க விட்டுவிட்டு திரும்பினேன். (நான் தொழாமல் சென்ற) தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் என்னிடம் இன்னாரே நீர் நம்மைக் கடந்து சென்ற போது ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய வீட்டிலேயே தொழுது விட்டேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள் நீ ஏற்கனவே தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு வந்தால் ஜமாஅத்துடன் தொழ வேண்டும்) என்று கூறினார்கள்.

  5. நூல் : அஹ்மது (17217)

நன்றி மறப்பது நன்றல்ல...

நன்றி மறப்பது நன்றல்ல...

 وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنْسَانَ لَظَلُومٌ كَفَّارٌ

அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கிறான்.’

[அல் குர்ஆன்14:34]

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

 நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்”
 14:7.

عن ابن المنكدر ، قال : كان من دعاء رسول الله : « اللهم أعني على ذكرك ، وشكرك ، وحسن عبادتك »

நபி(ஸல்) அவர்கள் அதிகமாக இவ்வாறு துஆ செய்வார்கள். யா அல்லாஹ் உன்னை திக்ரு செய்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நல்ல முறையில் உனக்கு வழிபடுவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக .

الحمد راس الشكر  ما شكرالله عبد لا يحمده قال رسول الله صل الله عليه وسلم

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகழ்வது நன்றிசெலுத்துவதின் தலையாகும். அல்லாஹ்வை புகழாத அடியான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவில்லை என்றார்கள்.

பெற்றோரை பேணுதல்...

பெற்றோரை பேணுதல்...

وعن عائشة قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " دخلت الجنة فسمعت فيها قراءة فقلت :
 من هذا ؟ قالوا : حارثة بن النعمان كذلكم البر كذلكم البر " . وكان أبر الناس بأمه . رواه في " شرح السنة " . والبيهقي في " شعب الإيمان "
 وفي رواية : قال : " نمت فرأيتني في الجنة " بدل " دخلت الجنة

நபி(ஸல்) கூறினார்கள்.
நான் கனவுலகில் சொர்க்கம் சென்றேன். அங்கு ஒருவர் குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டு விசாரித்தேன். அப்போது வானவர்கள் என்னிடம் அவர் உங்கள் தோழர் ஹாரிஸா(ரலி) என்றார்கள். இதனைத் தொடர்ந்து நபி (ஸல்) ஸஹாபாக்களிடம் பெற்றோருக்கு உபகாரம் செய்வதால் உங்களுக்கும்
இது போன்ற அந்தஸ்து கிடைக்கும் என்று கூறிவிட்டு ஹாரிஸா(ரலி)
தன் தாயிக்கு அதிகம் உபகாரம் செய்யக்கூடியவராக இருந்தார்
என்று கூறினார்கள்.

 நூல்: பைஹகி.

அனைத்து சந்தர்பத்திலும் அழைப்பு பணி...

அனைத்து சந்தர்பத்திலும் அழைப்பு பணி...

وَجَاءَ رَجُلٌ شَابٌّ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدَمٍ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ ثُمَّ شَهَادَةٌ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لَا عَلَيَّ وَلَا لِي فَلَمَّا أَدْبَرَ إِذَا إِزَارُهُ يَمَسُّ الْأَرْضَ قَالَ رُدُّوا عَلَيَّ الْغُلَامَ قَالَ يَا ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ

பஜ்ரு தொழுகையை இமாமாக நின்று தொழவைத்துக்கொண்டிருந்த
நீதியின் திரு உருவமான ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள்  அபூலுஃலு என்பனால் விஷம் தேய்த்த கத்தியினால் குத்தப்பட்டு தன் வீட்டில் வேதனையின் உச்சத்திலும் மரணத்தின் விளிம்பிலும் இருந்த நிலையில் கூட தன்னை நலம் விசாரிக்க வந்த வாலிபரின் கீழாடை கரண்டைக்கால் கீழ் இருக்க கண்டு அவர்திரும்ப செல்லும்போது அந்நேரத்திலும் சப்தமிட்டு அவரை அழைக்க முடியாமல் அருகிலுல்லவர்களின் துணை கொண்டு அழைத்து அவரிடம் சொன்னார்கள் சகோதர மகனே உன் ஆடையை உயர்த்திக்கொள் அது உன் ஆடைக்கு மிகுந்த சுகாதரத்தை தருவதுடன்
உன் இறைவனிடம் உனக்கு இறையச்சமிகுந்தவன் என்ற பெயரையும் தரும் என்றார்கள்.

நூல்: புகாரி

அனைத்து கஷ்டங்களும் விலகுவதற்க்கு வழி...

அனைத்து கஷ்டங்களும் விலகுவதற்க்கு வழி...

عبد الله بن عباس ، عن النبي صلى الله عليه وسلم قال : « من أكثر من الاستغفار ، جعل الله له من كل هم فرجا ، ومن كل ضيق مخرجا ، ورزقه من حيث لا يحتسب

வாழ்வின் அனைத்து கஷ்டங்களும் விலகும்..

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
எந்த மனிதன் பாவ மன்னிப்பு தேடுவதை அதிகப் படுத்தினானோ அவனுக்கு அல்லாஹ் எல்லா கவலைகளை விட்டும் விடுதலையையும் கஷ்டங்களை விட்டும் வெளியாகும் வழியையும் அவன் அறியாத புறத்தில் அவனுக்கு ரிஷ்க்கையும் வழங்குவான்!!!
       
நூல் : இப்னு மாஜா