Pages

Saturday, 10 September 2016

மதுவில் மருத்துவம் கிடையாது

மது குடிப்பவர்கள் அதை மருந்துக்காக குடிக்கிறோம் என்றும் அவ்வாறு குடிப்பதால் வேலை செய்த உடல் வலி தெரியாது என்றும் மன அமைதி கிடைக்கிறது என்றும் பொய்யான காரணங்களை சொல்லி தங்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
وعن ابن مسعود -رضي الله عنه- أنه قال: "إن الله لم يجعل شفاءكم فيما حرم عليكم].
صحيح البخاري
அல்லாஹ் ஹராமாக்கிய எந்த பொருளிலும் ஆரோக்கியம் கிடையாது.இதை அழுத்தமாக இப்னு மஸ்வூத ரலி அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
وعن طارق بن سويد الخضرمي قال: قلت يا رسول الله: إن بأرضنا أعنابا نعصرها أفنشرب منها، قال: (لا)، فراجعته فقال: (لا) لا ثم راجعته فقال (لا) فقلت: إنا نستشفي بها للمريض، قال: (إنه ليس بشفاء ولكنه داء)[].
رواه أحمد في مسنده
ஹழ்ரத் தாரிக் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
நான் நபி ஸல் அவர்களிடம்-அல்லாஹ்வின் தூதரே!எங்கள் ஊரில் திராட்சையில் இருந்து ஒருவித பானம் தயார் செய்கிறோம் அதை குடிக்கலாமா?என்று கேட்டான்.
அப்போது நபி ஸல் அவர்கள்,வேண்டாம் என்றார்கள்.மீண்டும் கேட்டேன். வேண்டாம் என்றார்கள்.பின்பு மீண்டும் கேட்டேன்,வேண்டாம் என்றார்கள்.
நாங்கள் அதை குடிப்பதால் ஆரோக்கியமாக இருப்பதை உணர்கிறோம் என்றேன்.அப்போது நபி ஸல் அவர்கள்-அது ஆரோக்கியமல்ல,நோய் என்றார்கள்.

No comments:

Post a Comment