Pages

Sunday, 11 September 2016

அல்லாஹ்வின் அருட்கொடைகள் ஏராளம்...

அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கியஅருட்கொடைகள்ஏராளமானவை,எண்ணிலடங்காதவை.
ஆரோக்கியம்,பாதுகாப்பு,வசிக்கும் இல்லம்,மனைவி,மக்கள்,செல்வம்,செல்வாக்கு இப்படி எத்தனையோ நிஃமத்துகளை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.
அல்லாஹ் நம்மை மனிதனாக பிறக்க வைத்ததுமுஃமின்களுடைய குடும்பத்தில் பிறக்க வைத்தது. ஈமானை வாரிசு சொத்தாக கொடுத்தது.இப்படி பல விசயங்களை நாம் பெற்றிருக்கிறோம்.

ஈமானை பெற நாம் ஸஹாபாக்களை போல் குடும்பத்தையோ அல்லதுசொத்துக்களையோஅல்லது மனைவி மக்களையோ அல்லது உயிரையோ நாம் இழந்திருக்கிறோமா.... ஈமானின் அருமை தெரிய வேண்டும் என்றால் உயிர் கொடுத்து ஈமானை அடைந்தார்களே அந்த ஸஹாபாக்களை கேட்டால் தெரியும்.

காலை முதல் மாலை வரை,பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அவனின் அன்புக்கும் அருளுக்கும் அளவுகோள் கிடையாது.

பிறக்கும் முன்னால் அவனை மூன்று திரைக்குள் வைத்து பாதுகாத்தான். தாயின் வழியாக உணவு கொடுத்தான்,தாயின் வழியாக நீர் கொடுத்தான்தாயின் வழியாக சுவாசத்தை கொடுத்தான்.

அவன் வெளியே வரும் பொழுது அதன் வழியை திறந்து கொடுத்தான்.
அவன் வந்த பிறகு இயற்கையாக தாயின் உள்ளத்தில் அந்த குழந்தையின் மீது பாசத்தை கொடுத்தான்தன்னை விட தன் உயிரை விட தன்னுடைய குழந்தைக்காக எதையும் துறக்குமளவுக்கு அந்த தாயின் உள்ளத்தை மாற்றினான்இரவு நேர தூக்கத்திலும் கூட குழந்தையின் சப்தம் கேட்டால் துடித்து எழுந்து விடுவாள். பசிக்காக அழுகிறதா... அல்லது சிறுநீர் கழிக்க அழுகிறதா என குழந்தையின் உணர்ச்சியோடு தாயின் உணர்ச்சியை கலந்தான்.

இரண்டாண்டு காலம் அவனை தாயின் மடியில் சுகமாக வாழ வைத்தான்.
அவன் சிறுவனானபோது தந்தையின் தோள் புஜத்தை அவனை சுமக்கும் கருவியாக மாற்றினான். வாலிபனாகியபோது அவன் வாகனிக்க எத்தனையோ வாகனத்தை கொடுத்தான். அவன் மரணித்த போது கூட அவனை நடக்கவிடவில்லை அல்லது தூக்கியெறிய விடவில்லை நான்கு பேரின் தோளில் தூக்கி சுமக்க வைத்தான்.

அவன் கப்ருக்கு வந்த பிறகு கப்ரிலிருந்து மறுமைக்கு வருவதற்கு வாகனத்தை வைத்திருக்கிறான். அவர்கள் கொடுக்ககூடிய குர்பானி பிராணியை அவர்களின் வாகனமாக தயார் செய்து வைத்திருகிறான்.


அல்லாஹ் கொடுத்த நிஃமத்துக்களை அனுபவிக்கும் நாம் அதற்குப் பகரமாக நாம் என்ன செய்தோம் என்ன செய்ய போகிறோம்.?

1 comment:

  1. D0nate your k1dney with the sum of 3 crore,For more details,Email: kidneydonationcenter@gmail.com
    WhatsApp +91 8681996093

    ReplyDelete