Pages

Tuesday, 13 September 2016

ஈமானும் சுத்தமும்.

ஈமானும் சுத்தமும்.


والطهور نصف الإيمان " . رواه الترمذي وقال هذا حديث حسن

நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
சுத்தம் ஈமானின் பாதியாகும் என்றார்கள்.

நூல். திர்மிதீ

பரிசுத்தமும் பாவமன்னிப்பும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوْ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنْ الذُّنُوبِ


திரு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
ஒரு முஸ்லிம் ஒளு செய்தால் முகத்தை கழுகினால் அந்த தண்ணீரோடு அல்லது அதன் கடைசி சொட்டோடு கண்களால் பார்த்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியேறிவிடும் அவன் கைகளை கழுகினால் அவனுடைய கைகளை விட்டும் தன் கைகளால் பற்றி கொண்ட எல்லா பாவங்களும் அந்த தண்ணீருடன் வெளியேறிவிடும். அவன் தனது கால்களை கழுகினால் அந்த கால்கள் எந்த பாவத்தின் பக்கம்  நடந்தனவோ அந்த பாவங்கள் தண்ணீருடன் வெளியேறிவிடு கின்றது ஒளுவின் இறுதியில் அவன் பாவங்களை விட்டு பரிசுத்தமாக்கப் பட்டவனாக வெளியேறுகிறான் என்றார்கள்.
    -
நூல் : முவத்தா இமாம் மாலிக்.

இஸ்லாமும் சுத்தமும்

இஸ்லாம் சுகாதாரம் குறித்து விரிவாக பேசுகிறது எனவே சுத்தத்தை 3 வகையாக பிரிகின்றது.

இடம் சுத்தம்உடல் சுத்தம்உடை சுத்தம்

1.       இடம் சுத்தம்.

وعن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : اتقوا اللاعنين : الذي يتخلى في طريق الناس أو في ظلهم .
تخريج السيوطي

தாஹா நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் சபிக்கப்படும் இரு விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள் (அந்த இரு செயல்களையும்) செய்பவர்கள் மக்களால் சபிக்க்ப்படுவார்கள்) அவர்கள் யாரென்றால் மக்களின் நடைபாதையில் மலம்ஜலம் கழித்து அசுத்தம் செய்பவன்.அல்லது மக்கள் நிழல் தேடும் மரங்களில் நஜீஸ் கழிப்பவன் என்று கூறினார்கள் அந்த நபிமொழி பொது இடங்களை அசுத்தம் செய்பவர்கள் சபிக்கப்பட தகுந்தவர்கள் என்று சொல்வதுடன் அப்படி காரியங்கள் செய்யக்கூடாது என்று வலியுருத்துகிறது.
             
நூல் : முஸ்லிம்

நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَذَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ


ஒரு மனிதர் ஒரு பாதையில் நடந்து சென்றால் அப்பாதையில் முள்ளு மரத்தின் ஒரு கிளையை பெற்றுக் கொண்டார். அதை எடுத்து பாதையை விட்டும் அகற்றினார் இதனால் அவருக்கு நன்றி செலுத்தினான். அல்லாஹ் மன்னித்தான் இன்னொரு அறிவிப்பில் அந்த நபர் சுவர்க்கத்தில் உலா வருவதை நான் கண்டேன் என்றார்கள்.
          
நூல் : புகாரி.
جَابِرٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا بَصَقَ أَحَدُكُمْ فَلَا يَبْصُقْ عَنْ يَمِينِهِ وَلَا بَيْنَ يَدَيْهِ وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ


சுந்தர நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் உங்களில் ஒருவர் எச்சி துப்பினால் வலது புறமோ தன்னுடைய முன் புறமோ துப்ப வேண்டாம் இடது புறம் அல்லது கால் பாதத்திற்கு கீழ் துப்பட்டும்
    
நூல் : அஹ்மத்

No comments:

Post a Comment