Pages

Thursday, 15 September 2016

பிறருக்காக அறுக்கப்பட்ட பிராணிகள்:#

பிறருக்காக அறுக்கப்பட்ட பிராணிகள்:#
{ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ} [الكوثر: 2]
உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக அல்குர்ஆன் (108:2)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، عَنْ مَنْصُورِ بْنِ حَيَّانَ، عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ: قُلْنَا لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَخْبِرْنَا بِشَيْءٍ أَسَرَّهُ إِلَيْكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا أَسَرَّ إِلَيَّ شَيْئًا كَتَمَهُ النَّاسَ، وَلَكِنِّي سَمِعْتُهُ يَقُولُ: «لَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللهِ، وَلَعَنَ اللهُ مَنْ آوَى مُحْدِثًا، وَلَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَيْهِ، وَلَعَنَ اللهُ مَنْ غَيَّرَ الْمَنَارَ»
'யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல்: முஸ்லிம் 4001, 4002, 4003
மேற்கண்ட இறைவசனம் மற்றும் நபி மொழி அல்லாஹ்விற்கு மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
ஒருவன் தன்னுடைய உணவுத் தேவைக்காக ஒரு பிராணியை அறுத்தால் அதனை அல்லாஹ்வின் பெயர் கூறியே அறுக்க வேண்டும.
அல்லாஹ்விற்காக ஒரு பிராணியை அறுத்தல் என்றால் இறைவன் இட்ட கட்டளைக்காக அறுத்துப் பலியிடுவதாகும்.
ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றும் குர்பானி வணக்கம், பிராணியை அறுத்துப்பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்தல், மற்றும் அகீகா போன்றவை வணக்கங்களாகும்.
ஒருவன் தன்னுடைய உணவுத் தேவைக்காக அல்லாமல் வணக்கமாக அறுப்பதாக இருந்தால் அல்லாஹ்விற்காக மட்டுமே மார்க்கம் அனுமதித்த அறுத்துப் பலியிடும் வணக்கங்களைச் செய்ய வேண்டும்.
அதுவல்லாமல் ஒருவன் தர்ஹாக்களிலோ அல்லது அவுலியாக்களுக்காக அறுத்துப் பலியிட்டால் அது நிரந்தர நரகத்தில் சேர்க்கும் இணைவைப்புக் காரியமாகும்.
எனவே ஒருவன் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதைப் போன்று இறைன் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிட்டால் அதனை உண்பது கூடாது. அவன் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அது ஹராமானதாகும்.

No comments:

Post a Comment