Pages

Thursday, 15 September 2016

நிரந்தரத்தன்மை

நிரந்தரத்தன்மை
எந்த அமலை செய்தாலும் அதை நிறந்தரமாக செய்யும்போதே அதன் பலனை பெற்றுக்கொள்ள முடியும்.ஆனால் இன்று நிரந்தரத்தன்மை என்பது எல்லா காரியத்திலும் அரிதாகி வருகிறது.
عن أنس ابن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: «يأتي على الناس زمان، الصابر فيهم على دينه كالقابض على الجمر»,
மக்களுக்கு ஒருகாலம் வரும் அதில் தன் தீனில் நிலைத்திருப்பது நெருப்பு கங்கை கையில் பிடித்திருப்பது போல கடினமானது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
نَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّـهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
இந்த தீனில் நாம் இஸ்திகாமத்தாக இருப்பதற்கு நாம் ஒரு உறுதி எடுக்க வேண்டும்.அது ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் எடுத்த உறுதிமான
மாகும்.
அந்த உறுமானம் இதுதான்:
اينقص الدين وانا حي
நான் உயிருடன் இருக்கும் வரை என் தீனுக்கு எந்த குறைபாடு ஏற்பட விடமாட்டேன்.
இதை நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுக்கவேண்டும்.
அல்லாஹ் நாம் விரும்பாமல், கேட்காமல், எந்த தியாகமும் செய்யாமல் இந்த தீனை வழங்கினான்.அந்த தீனின் கண்ணியத்தை பாதுகாப்பது நாம் அனைரின் மீதும் கடமையாகும்.
நம் சொல்லால்,செயலால்,நடத்தையால் இந்த தீனுக்கு எந்த இழுக்கையும் ஏற்படுத்திவிடக்கூடாது.ஒரு முஃமின் தன் கண்ணியத்தை பாதுகாப்பது எவ்வளவு கடமையோ
அவ்வாறு தன் ரப்பின் கண்ணியத்தையும்,அல்லாஹ்வின் தூதரின் கண்ணியத்தையும் பாதுகாப்பது கடமையாகும்.

No comments:

Post a Comment