Pages

Thursday, 18 June 2015

மனிதன், ஓர் உன்னத் படைப்பு!

1. நிச்சயமாக நாம் ஆதமுடைடய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். …….நாம் படைத்துள்ள பலவற்றைவிட அவர்களை மேன்மைப்படுத்தினோம். (அல்குர்ஆன் 17:70)
2. நிச்சயமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் 95:4)
3. (அல்லாஹ்) அவனே, தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; மேலும், அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். (அல்குர்ஆன் 32:7)
4. மனிதனே! சங்கை மிகு கொடையாளனான உன்இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப் படைத்து, உன்னை ஒழுங்குப்படுத்தி, உன்னை செவ்வையாக்கினான்; எந்த வடிவில் அவன் விரும்பினானோ (அப்படியே) பொருத்தினான். (அல்குர்ஆன்82:6-8)
5. (மனித இனத்தின் ஆதி மனிதன்) ஆதமுக்கு அல்லாஹ் எல்லாப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன்2:31)
6. (அர்-ரஹ்மான்) அளவற்ற அருளாளன்; இந்த குர்ஆனை கற்றுத் தந்தான்; மனிதனைப் படைத்தான்; அவனே மனிதனுக்கு (பகுத்தறிவு, பேச்சு) விளக்கத்தையும் கற்றுத் தந்நதான். (அல்குர்ஆன் 55:1-4)
7. மனிதனுக்கு அறியாதவற்றையயல்லாம் (அல்லாஹ்) கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 96:5)
8. ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்கு வதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
9. உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்க ளுடைய சந்ததிகளை வெளியாக்கி,அவர்களைத் தங்களுக்கே சாட்சி யாக வைத்து:
“”நான் உங்களது இரட்சனல்லவா?” எனக் கேட்டதற்கு, அவர்கள், “”உண்மைதான், நாங்கள் சாட்சி கூறுகிறோம் என்று கூறியதை நினைவூட்டுவீராக.” (அல்குர்ஆன் 7:172)
10. (ஆதி மனிதர் ஆதத்தை இவ்வுலகுக்கு அனுப்பியபோது) அல்லாஹ் அறிவுறுத்தியது:
நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அற வுரைகள்)வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்று கிறார்களோ அவர்களுக்கு எத்தகை அச்சமுமில்லை; அவர்கள் துக்க படவுமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:38)
11. ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே(நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு(தம் வாழ்க்கையில்) திருத்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவம் மாட்டார்கள். (அல்குர்ஆன் 7:35)
12. ஆதமுடைய மக்களே ! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களு டைய அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம்; ஆயினும் தக்வா(இறை உணர்வு) என்னும் ஆடையே உயர்வானது. (அல்குர்ஆன் 51:56)
குறிப்பு : எல்லாம் வல்ல அல்லாஹ் தானே ஆதி மனிதன் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து, அழகிய உருவமைப்பைக் கொடுத்து, தனது ரூகை(உயிரை) ஊதி, தானே பாடங்களையும் கற்பித்து மற்ற தனது படைப்புகளை விட மேன்மையானதாக, கண்ணியமிக்க உன்னத படைப்பாக்கினான். வேறு எந்த படைப்பினத்திற்குமில்லாத பேச்சு, பகுத்தறிவு, விளங்கி செயல்படும் (பயான்) சக்திகளை இம்மனிதனுக்கு மட்டுமுள்ள சிறப்பு அம்சங்களாக்கினான். மனிதன் அறியாதவற்றை யயல்லாம் கற்றுக் கொடுத்தான்; கற்று கொடுத்துக்கொண்டிருக்கின்றான்.
இச்சிறப்புக்களைப் பெற்ற மனித இனம் தன்னை மட்டும் இரட்சக னாக ஏற்று வணங்க வேண்டுமென ஆணையிடுகின்றான். நாமும் ஆதியிலேயே அவன் மட்டுமே இரட்சகன் என ஏற்று சாட்சி பகர்ந்துள்ளோம். (பார்க்க 7:172)
எப்படி அவனை வணங்கவேண்டும்? வணக்கம் என்றால் என்ன? என்ற விபரங்களை தனது அறவுரைகள் மூலம் தெரிவிப்பதாகவும் அல்லாஹ் ஆதி மனிதருக்கு அறிவித்தான். அவ்அறிவிப்புப்படி நம் மிலிருந்தே நமக்கு நேர்வழி காட்ட அவனது நேர் வழிகாட்டிகளை நபி -ரசூல்மார்களை அனுப்பி வைத்தான். அவர்கள் காட்டும் நேர்வழிபடி நடப்பவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை: அவர்கள் எதற்கும் துக்கபடமாட்டார்கள் என்ற உத்திரவாதமும் அளித்துள்ளான்.
அழகிய படைப்பு, ஆற்றல்மிக்க பகுத்தறிவு, அல்லாஹ்-ஓரிறைவன் என்ற உணர்வு, அதனை அவ்வப்போது நினைவூட்ட அவனது நேர்வழிகாட்டிகள்,அறவுரைகள் வருகை என வரிசைப்படுத்தி அதன்படி இறைவுணர்வுடன் வாழ்வதே மேன்மையான வாழ்வு, உன்னத வாழ்வு என நமக்கு தெளிவுபடுத்தியுள்ளான். இச்சிறப்புக்கள் வேறு எந்த படைப்பினத்திற்குமில்லாத சிறப்பு அம்சங்களாகும்

No comments:

Post a Comment