Pages

Monday, 15 June 2015

ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)

ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)
மக்கீ, வசனங்கள்: 42

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
80:1    عَبَسَ وَتَوَلَّىٰ
80:1அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2   أَن جَاءَهُ الْأَعْمَىٰ
80:2அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3   وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ
80:3(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4   أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ
80:4அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:5   أَمَّا مَنِ اسْتَغْنَىٰ
80:5(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:6   فَأَنتَ لَهُ تَصَدَّىٰ
80:6நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7   وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
80:7ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8   وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ
80:8ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9   وَهُوَ يَخْشَىٰ
80:9அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10   فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
80:10அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
80:11   كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
80:11அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
80:12   فَمَن شَاءَ ذَكَرَهُ
80:12எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
80:13   فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ
80:13(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
80:14   مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ
80:14உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
80:15   بِأَيْدِي سَفَرَةٍ
80:15(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
80:16   كِرَامٍ بَرَرَةٍ
80:16(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
80:17   قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
80:17(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
80:18   مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ
80:18எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
80:19   مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
80:19(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
80:20   ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ
80:20பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
80:21   ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
80:21பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.
80:22   ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ
80:22பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
80:23   كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ
80:23(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
80:24   فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ
80:24எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
80:25   أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا
80:25நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
80:26   ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
80:26பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
80:27   فَأَنبَتْنَا فِيهَا حَبًّا
80:27பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
80:28   وَعِنَبًا وَقَضْبًا
80:28திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
80:29   وَزَيْتُونًا وَنَخْلًا
80:29ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
80:30   وَحَدَائِقَ غُلْبًا
80:30அடர்ந்த தோட்டங்களையும்,
80:31   وَفَاكِهَةً وَأَبًّا
80:31பழங்களையும், தீவனங்களையும்-
80:32   مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
80:32(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
80:33   فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
80:33ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
80:34   يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ
80:34அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35   وَأُمِّهِ وَأَبِيهِ
80:35தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36   وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
80:36தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37   لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
80:37அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
80:38   وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
80:38அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
80:39   ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
80:39சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
80:40   وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
80:40ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
80:41   تَرْهَقُهَا قَتَرَةٌ
80:41அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
80:42   أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
80:42அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.

No comments:

Post a Comment