Pages

Thursday, 18 June 2015

ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)

ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)
மதனீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
62:1    يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ الْمَلِكِ الْقُدُّوسِ الْعَزِيزِ الْحَكِيمِ
62:1வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன; (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
62:2   هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
62:2அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
62:3   وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
62:3(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
62:4   ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
62:4அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
62:5   مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ۚ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
62:5எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
62:6   قُلْ يَا أَيُّهَا الَّذِينَ هَادُوا إِن زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَاءُ لِلَّهِ مِن دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِن كُنتُمْ صَادِقِينَ
62:6(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.”
62:7   وَلَا يَتَمَنَّوْنَهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ۚ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ
62:7ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
62:8   قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
62:8“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
62:9   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
62:9ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
62:10   فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
62:10பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
62:11   وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا ۚ قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ۚ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ
62:11இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.






மனிதன், ஓர் உன்னத் படைப்பு!

1. நிச்சயமாக நாம் ஆதமுடைடய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். …….நாம் படைத்துள்ள பலவற்றைவிட அவர்களை மேன்மைப்படுத்தினோம். (அல்குர்ஆன் 17:70)
2. நிச்சயமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் 95:4)
3. (அல்லாஹ்) அவனே, தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; மேலும், அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். (அல்குர்ஆன் 32:7)
4. மனிதனே! சங்கை மிகு கொடையாளனான உன்இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப் படைத்து, உன்னை ஒழுங்குப்படுத்தி, உன்னை செவ்வையாக்கினான்; எந்த வடிவில் அவன் விரும்பினானோ (அப்படியே) பொருத்தினான். (அல்குர்ஆன்82:6-8)
5. (மனித இனத்தின் ஆதி மனிதன்) ஆதமுக்கு அல்லாஹ் எல்லாப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன்2:31)
6. (அர்-ரஹ்மான்) அளவற்ற அருளாளன்; இந்த குர்ஆனை கற்றுத் தந்தான்; மனிதனைப் படைத்தான்; அவனே மனிதனுக்கு (பகுத்தறிவு, பேச்சு) விளக்கத்தையும் கற்றுத் தந்நதான். (அல்குர்ஆன் 55:1-4)
7. மனிதனுக்கு அறியாதவற்றையயல்லாம் (அல்லாஹ்) கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 96:5)
8. ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்கு வதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
9. உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்க ளுடைய சந்ததிகளை வெளியாக்கி,அவர்களைத் தங்களுக்கே சாட்சி யாக வைத்து:
“”நான் உங்களது இரட்சனல்லவா?” எனக் கேட்டதற்கு, அவர்கள், “”உண்மைதான், நாங்கள் சாட்சி கூறுகிறோம் என்று கூறியதை நினைவூட்டுவீராக.” (அல்குர்ஆன் 7:172)
10. (ஆதி மனிதர் ஆதத்தை இவ்வுலகுக்கு அனுப்பியபோது) அல்லாஹ் அறிவுறுத்தியது:
நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அற வுரைகள்)வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்று கிறார்களோ அவர்களுக்கு எத்தகை அச்சமுமில்லை; அவர்கள் துக்க படவுமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:38)
11. ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே(நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு(தம் வாழ்க்கையில்) திருத்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவம் மாட்டார்கள். (அல்குர்ஆன் 7:35)
12. ஆதமுடைய மக்களே ! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களு டைய அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம்; ஆயினும் தக்வா(இறை உணர்வு) என்னும் ஆடையே உயர்வானது. (அல்குர்ஆன் 51:56)
குறிப்பு : எல்லாம் வல்ல அல்லாஹ் தானே ஆதி மனிதன் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து, அழகிய உருவமைப்பைக் கொடுத்து, தனது ரூகை(உயிரை) ஊதி, தானே பாடங்களையும் கற்பித்து மற்ற தனது படைப்புகளை விட மேன்மையானதாக, கண்ணியமிக்க உன்னத படைப்பாக்கினான். வேறு எந்த படைப்பினத்திற்குமில்லாத பேச்சு, பகுத்தறிவு, விளங்கி செயல்படும் (பயான்) சக்திகளை இம்மனிதனுக்கு மட்டுமுள்ள சிறப்பு அம்சங்களாக்கினான். மனிதன் அறியாதவற்றை யயல்லாம் கற்றுக் கொடுத்தான்; கற்று கொடுத்துக்கொண்டிருக்கின்றான்.
இச்சிறப்புக்களைப் பெற்ற மனித இனம் தன்னை மட்டும் இரட்சக னாக ஏற்று வணங்க வேண்டுமென ஆணையிடுகின்றான். நாமும் ஆதியிலேயே அவன் மட்டுமே இரட்சகன் என ஏற்று சாட்சி பகர்ந்துள்ளோம். (பார்க்க 7:172)
எப்படி அவனை வணங்கவேண்டும்? வணக்கம் என்றால் என்ன? என்ற விபரங்களை தனது அறவுரைகள் மூலம் தெரிவிப்பதாகவும் அல்லாஹ் ஆதி மனிதருக்கு அறிவித்தான். அவ்அறிவிப்புப்படி நம் மிலிருந்தே நமக்கு நேர்வழி காட்ட அவனது நேர் வழிகாட்டிகளை நபி -ரசூல்மார்களை அனுப்பி வைத்தான். அவர்கள் காட்டும் நேர்வழிபடி நடப்பவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை: அவர்கள் எதற்கும் துக்கபடமாட்டார்கள் என்ற உத்திரவாதமும் அளித்துள்ளான்.
அழகிய படைப்பு, ஆற்றல்மிக்க பகுத்தறிவு, அல்லாஹ்-ஓரிறைவன் என்ற உணர்வு, அதனை அவ்வப்போது நினைவூட்ட அவனது நேர்வழிகாட்டிகள்,அறவுரைகள் வருகை என வரிசைப்படுத்தி அதன்படி இறைவுணர்வுடன் வாழ்வதே மேன்மையான வாழ்வு, உன்னத வாழ்வு என நமக்கு தெளிவுபடுத்தியுள்ளான். இச்சிறப்புக்கள் வேறு எந்த படைப்பினத்திற்குமில்லாத சிறப்பு அம்சங்களாகும்

மானக் கேடான செயல்கள யாவை?

1. என் இறைவன் தடுக்கப்பட்டவை (ஹராம்) எனத் தடுத்திருப்பதையெல்லாம் வெளிப்படையான அல்லது அந்தரங்கமான மானக்கேடான செயல்கள்: பாவங்கள்:
நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது: ஆதாரமில்லாமலே நீங்கள் அல்லாஹ்வுக:கு இணைவைத்தல்: நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது. (ஆகிய இவைகளே என்று நபியு!) நரு் கூறுவீராக. (7:33)
2. நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள். (4:22)
3. நீங்கள் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும்(அது வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியுமாகவும் இருக்கின்றது. (17:32)
4. லூத்(அலை) அவர்கள் தம் சமூகத்தாரிடம் கூறினார். நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்ய முனைந்துவிட்டீர்கள்? (29:28, 7:80)
5. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கிறீர்கள். (7:81)
6. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழிமறி(த்துப் பிராணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கிறீர்கள். உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்க (மானக்கேடான) வற்றைச் செய்கின்றீர்கள் என்று கூறினார். (29:2)
7. லூத்(அலை) அவர்கள் தம் சமூகத்தாரிடம் “நீங்கள் பார்த்துக் கொண்டே மான்கேடான செயலைச் செய்கின்றீர்களா, நீங்கள் பெண்களை விட்டுவிட்டு மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லா மக்களாக இருக்கின்றீர்கள் என்று கூறினார். (27: 54,55)
8. (நன்மை செய்வோர் யாரெனில்) எவர்கள் பாவங்களையும் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள் (53:32)
9. (இறை நம்பிக்கையாளர்களான) அவர்கள் (எத்தகையோரெனில்) பெரும்பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொண்டு தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (42:37)
*****************************************************************************************************

நமது நபியும் நமக்கு வக்கீல் அல்லர்

    1. (நபியே! திருக்குர்ஆனாகிய) இது
முற்றிலும் உண்மையாக இருந்தும் உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர். எனவே நான்
உங்கள் (வக்கீல்) பொறுப்பாளன் அல்ல என்று நபியே! நீர் கூறி விடும். 
(6:66)
    2. (நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களே!
நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது. எனவே யார்
(அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கின்றாரோ அவர் தம் நன்மைக்காகவே
அந்நேர்வழியில் செல்கின்றனர். எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக
அவர் தமக்கு கேடான வழியிலேயே செல்கின்றார். நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி உங்கள்
காரியங்களை கவனிக்க அதிகாரம் பெற்றவன்(வக்கீல்) அல்லன்.
(10:108)
    3. நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக
உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியுள்ளோம். எனவே எவர் (இந்த)
நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழித் தவறி
கெடுகிறாரோ அவர்  தனக்கு பாதகமாகவே வழிக்கெட்டுப் போகிறார். அன்றியும்
நீங்கள் அவர்கள் மீது (வக்கீல்) பொறுப்பாளி அல்லர்.
(39:41)
    4. அவனையன்றித் (தங்களுக்கு வேறு)
பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்.
நீர் அவர்கள் (வக்கீல்) பொறுப்பாளர் அல்லர். 
(42:6)
    5. (நபியே) நாம் உம்மை அவர்கள் மீது
காப்பாளராக ஏற்படுத்தவில்லை. இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்
வக்கீல்) பொருப்பாளரும் அல்லர்.   (6:107)
    6. (நபியே!) நிச்சயமாக நீர் அச்சமூட்டி
எச்சரிப்பவரேயன்றி  வேறில்லை. அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும்
பொறுப்பாளனாக(வக்கீல்) இருக்கின்றான்.  (11:12)
    7. (நபியே!) அல்லாஹ்வையே நீர்
முற்றிலும் நம்புவீராக. அல்லாஹ்வே (உமக்கும்) பாதுகாவலனாக (வக்கீலாக) இருக்கப்
போதுமானவன்.   (33:3)
    8. உங்களது இறைவன் உங்களைப் பற்றி
நன்கறிவான். அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான். அல்லது அவன் நாடினால் உங்களை
வேதனை செய்வான். நாம் உம்மை அவர்களுக்கு (வக்கீலாக) பொறுப்பாளியாக அனுப்பவில்லை.    (17:54)
    9. (நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம்
வஹீயாக அறிவித்ததை (குர்ஆனை) போக்கி விடுவோம். பின்னர் நமக்கெதிராக உமக்குப்
பொறுப்பேற்கக் கூடிய (வக்கீல்) எவரையும் நீர் காணமாட்டீர்.    (17:86)
    10. (நபியே!) காஃபிர்(இறை
மறுப்பாளர்)களுக்கும் (நயவஞ்சக) முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர். அவர்கள் (தரும்)
துன்பத்தை (ப்புறக்கணித்து) விடுவீராக! அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிக் கொண்டு
(அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வெ போதுமான பாதுகாவலனாக (வக்கீலாக)
இருக்கின்றான்.
    11. தன் (இழிவான) இச்சையையே தன்
தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அத்தகையவனுக்கு நீர்
வக்கீலாக பாதுகாவலராக இருப்பீரா?
      (25:43)
    12. முஃமின்களே! என்னே! இத்தகைய
மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள்-நியாயத் தீர்ப்பு நாளில்
அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) பொறுப்பாளியாக
ஆகுபவன் யார்?
(4:109)

Tuesday, 16 June 2015

புகை நமக்கு பகை

2:195   وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
2:195அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.                                                                                        4:29   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
4:29நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.                                                                            7:31   يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
7:31ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.                                                                   5:2   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَائِدَ وَلَا آمِّينَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِّن رَّبِّهِمْ وَرِضْوَانًا ۚ وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا ۚوَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَن تَعْتَدُوا ۘ وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
5:2முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.                                                                                                          42:30   وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ
42:30அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.




Monday, 15 June 2015

சூரத்துல் கியாமா

ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)
மக்கீ, வசனங்கள்: 40

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
75:1    لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ
75:1கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
75:2   وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
75:2நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
75:3   أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ
75:3(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
75:4   بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ
75:4அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
75:5   بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ
75:5எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
75:6   يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ
75:6“கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
75:7   فَإِذَا بَرِقَ الْبَصَرُ
75:7ஆகவே, பார்வையும் மழுங்கி-
75:8   وَخَسَفَ الْقَمَرُ
75:8சந்திரனும் ஒளியும் மங்கி-
75:9   وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
75:9சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
75:10   يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
75:10அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
75:11   كَلَّا لَا وَزَرَ
75:11“இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
75:12   إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ
75:12அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
75:13   يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
75:13அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
75:14   بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ
75:14எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
75:15   وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ
75:15அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
75:16   لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
75:16(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
75:17   إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
75:17நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
75:18   فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
75:18எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
75:19   ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
75:19பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
75:20   كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
75:20எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
75:21   وَتَذَرُونَ الْآخِرَةَ
75:21ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
75:22   وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
75:22அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
75:23   إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
75:23தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
75:24   وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ
75:24ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
75:25   تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
75:25இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
75:26   كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ
75:26அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
75:27   وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
75:27“மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.
75:28   وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ
75:28ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
75:29   وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ
75:29இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
75:30   إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ
75:30உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  
75:31   فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
75:31ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.
75:32   وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
75:32ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
75:33   ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ
75:33பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
75:34   أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
75:34கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
75:35   ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
75:35பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
75:36   أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى
75:36வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
75:37   أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ
75:37(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
75:38   ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
75:38பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
75:39   فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
75:39பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
75:40   أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ
75:40(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?