Pages

Sunday, 7 September 2014

தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; 

மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; 

எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; 

அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; 

அவர் அவனிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!" என்பார்.

அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி),

'நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'கொள்ள மாட்டோம்!" என்பார்கள்.

உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும்,

'அல்லாஹ்வின் மீது ஆணையாக!

இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!" என்று கூறுவார்.

தஜ்ஜால் 'நான் இவரைக் கொல்வேன்!" என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!" என்று தஜ்ஜால் பற்றி நபி(ஸல்) அவர்கள் நீண்ட விளக்கம் தரும்போது இதைக் கூறினார்கள் என்றும் அறிவித்தார்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத்(ரலி)

நூல்: ஸஹீஹுல் புகாரி 1882.
Volume:2,Book:29.

No comments:

Post a Comment