Pages

Thursday, 7 August 2014

* * * தினம் ஒரு ஹதீஸ் * * *

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். அப்போது அவரது வயிற்றிலுள்ள குடல்கள் முழுவதும் வெளியே வந்துவிடும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் நரகை அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?‘ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்” என்று கூறுவார்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)                   நூல்: புகாரி 3267
                                   

No comments:

Post a Comment