Pages

Saturday, 1 March 2014

hadees

அஸ்ஸலாமு அலைக்கும் 
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு........

1079 : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்....... 
உங்களில் ஒருவர் ஸஜ்தா செய்யும் போது ஒட்டகம் அமர்வதை போல அமர வேண்டாம்.
மூட்டு கால்களை வைக்கும் முன் கைகளை தரையில் வைக்கட்டும். அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.......
நூல் :நஸாயி.......

723. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வரிசையை ஒழுங்கு படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்கு படுத்துவது தொழுகையை நிலை பெறச் செய்வதாகும்."
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி.........

359. 'உங்களில் ஒருவர் தன்னுடைய தோளின் மீது எதுவும் இல்லாதிருக்க ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி.........

750. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தொழும்போது தங்கள் பார்வைகளை வானத்தில் உயர்த்துகிறவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் பார்வை பறிக்கப்பட்டுவிடும்."
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

691. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவான் .........
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி.........

751. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். 'ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புஹாரி.........

822. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது."
என அனஸ்(ரலி) அறிவித்தார்...
நூல் : புஹாரி.........

908. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி.........

674. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களில் ஒருவர் உணவு அருந்திக் கொண்டு இருக்கும்போது தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டால், தம் தேவைகளை முடிப்பதற்கு முன்பாக அவசரப் பட்டு எழுந்து விட வேண்டாம்."
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்......
நூல் : புஹாரி.........

1163. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்'.
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி.........

177. 'காற்றுப் பிரியும் சப்தத்தைக் கேட்கும் வரை அல்லது நாற்றத்தை உணரும் வரை (தொழுபவர் தொழுகையைவிட்டு) திரும்பிச் செல்லக் கூடாது' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அப்துல்லாஹ் இப்னு ஜைது(ரலி) அறிவித்தார்...
நூல் : புஹாரி.

No comments:

Post a Comment