Pages

Tuesday, 3 September 2013

இறுதி நாளின் அடையாளங்கள்

யுக முடிவு நாளின் முக்கிய அடையாளங்கள் நபி(ஸல்) பல சிறிய அடையாளங்களும், பல பெரிய அடையாளங்களும உலகம் அழியுமுன் தோன்றும் என்று முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
அவற்றுள் சில முக்கிய அடையாளங்களாவன:-
1. முஸ்லிமகள் சிலை வணக்கம் புரிவர்.
2. அறியாமை பெருகும்.
3. விபச்சாரம் பெருகும்.
4. குடி அதிகரிக்கும்.
5. கொலை குற்றங்கள் அதிகமாக நிகழும்.
6. காலம் சுருங்கும்.
7. குழப்பங்கள் மலியும்.
8. தனிமையை மனிதன் விரும்புவான்.
9. வாழவேண்டுமென்ற ஆசையே இல்லாது போய்விடும்.
10. தகுதியற்றவனிடம் ஆட்சி அதிகாரங்கள் வரும்.
11. மிகவும் மோசமானவர்கள் ஆட்சிக்கு வருவர்.
12. எங்கு பார்த்தாலும் போர் நடைபெறும்.
13. ஆண்களின் எண்ணிக்கை குறையும்.
14. தாய்க்கு எஜமானியாக மகள் இருப்பாள்.
15. சாமானிய மனிதன் உயர்ந்த நிலையை அடைவான்.
16. செல்வம் பெருகும்.
17. கருமித்தனம் ஏற்படும்.
18. மாட மாளிகைகள் கட்டுவதில் போட்டிஉருவாகும்.
19. தம்மை தாமே இறைதூதர் என கூறுவோர் வருவர்.
20. பூகம்பம் அதிகரிக்கும்.
21. தவறான தொழில்களை நல்லது எனச் செய்வர்.
21. பள்ளிவாசல்கள் பெருமைக்காக கட்டப்படும்
22. இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்படும்.
23. முஸ்லிம்களே இருக்கமாட்டார்கள். (முஸ்லிமகள் இஸ்லாத்தை விட்டுவிட்டு சிலை வணக்கங்களின் பக்கம் திரும்புவர்)
பத்து பெரிய அடையாளங்கள்
1. புகை மூட்டம் ஏறபடும்.
2. தஜ்ஜால (Thajjal)் என்னும் என்னும் கொடியோன் தோன்றுவான்.
3. தாப்பத்துல் அர்ள் என்னும் அதிசயப்பிராணி தோன்றும்.
4. சூரியன் மேற்கே உதிக்கும்.
5. நபி ஈஸா (அலை)[இயேசு] அவர்கள் வருவார்கள்.
6. யஃஜ்உஜ், மஃஜ்உஜ் (Ya’jooj & Ma’jooj)வருகை (குர்ஆன் 21:96)
7. கிழக்கே ஒரு பூகம்பம்.
8. மேற்கே ஒரு பூகம்பம்
9. அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்.
10. இறுதியாக எமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்.
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்நாள் ஏற்படாது.
(அறிவிப்பவர்: ஹ{தைபா(ரலி),நூல்: முஸ்லிம்)


No comments:

Post a Comment