Pages

Saturday, 21 September 2013

மொபைல் போன் பேச்சை குறையுங்கள்:

மொபைல் போன் பேச்சை குறையுங்கள்:      
           மூளைக்கு புற்றுநோய் கொண்டு வரும் அபாய பட்டியலில் மொபைல் போன்கள் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூளைக்கு புற்றுநோய் கொண்டு வரும் அபாய பட்டியலில் மொபைல் போன்கள் இரண்டாவது இடத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய "கார்சினோ ஜெனிக்" பட்டியலில் வாகனப்புகை குளோரோபார்ம், காரியம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகள் இடம் பெற்றிருந்தன்.

இப்போது அந்த பட்டியலில் மொபைலும் சேர்ந்து கொண்டது.

செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டு விட்டது.

14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களை கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவின்படி, செல்போனில் வெளிப்படும் மின் காந்த அலைகள் மூளையின் நரம்பு செல்களை சுற்றியுள்ள கிளை செல்களை தாக்கி புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.


அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 சதவீதத்தினருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது, உலக சுகாதார அமைப்பு. இப்போது ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகளை வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். இது இன்னும் அதிகமான கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. அதணால் ஆபத்து இன்னும் அதிகம். 

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்ரே புறஊதாக் கதிர்கள், உடலில் உள்ள செல்களை தாக்கி பாதிக்கச் செய்யும் தன்மை கொண்டவை. இதை "அயோனைசிங் ரேடியேஷன்" என்கிறார்கள். இதற்கு மாறாக உடலின் செல்களை பாதிக்காத கதிர்வீச்சுகள் என்ற வகையில்தான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன.


ரேடியோ அலைகள் வகையில் வருவதுதான் மின்காந்த அலைகள். இதன்மூலம் தான் செல்போன் இயங்குகிறது. இது எப்படி மூளையின் செல்களை பாதிக்கும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள். ஆனால் தாக்காது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆய்வு எதுவும் இல்லை. பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது.


உண்மையை ஏற்றுக்கொள்வதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. செல்போன் உபயோகத்தை இனி நம்மால் நிறுத்த முடியாது. பேச்சை குறைத்துக்கொள்ளலாம். அதிக நேரம் செல்போன் பேசுவதால் காதுகளின் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது. ஆகையால் இந்த ஆய்வை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு செல்போன் பேச்சை குறைத்துக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment