Pages

Saturday, 3 August 2013

வட்டியில் வருமான வரி கட்டலாமா?

வட்டிஓர் வங்கொடுமை
கேள்வி -வருமான வரியைக் கழிப்பதற்காக லோன் வாங்கலமா? வங்கியில் பணம் டெப்பாசிட் செய்து அதிலிருந்து வரும் வட்டியில் வருமான வரி கட்டலாமா?

பதில் - வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் 2:275

வட்டி வாங்குபவர்களுக்கு நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே, ஒரு முஸ்லிம் எந்தக் காரணத்தைக் கூறியும் வட்டியை நியாயப்படுத்தக் கூடாது.

பணத்தை டெப்பாசிட் செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியில் வருமான வரி செலுத்துவதை விட, அந்தப் பணத்தை ஏதேனும் தொழிலில் முதலீடு செய்து வட்டியை விட அதிகமாகச் சம்பாதிக்க முடியும். அந்த வருமானத்திலிருந்து வரி செலுத்தலாம். அதை விட்டு விட்டு இது போன்ற தடை செய்யப்பட்ட, அதிலும் நிரந்தர நரகம் என்று எச்சரிக்கப்பட்ட வட்டியை ஒரு இறை நம்பிக்கையாளர் ஒரு போதும் தேர்ந்தெடுக்கக் கூடாது.

No comments:

Post a Comment