Pages

Saturday, 17 August 2013

ஷவ்வால் மாத ஆறு நோன்பு!

தகவல்
ரமளான் முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்...

யார் ரமளான் மாதம் நோன்பு நோற்று அதை தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

அறிவிப்பவர்: அபூ அய்யுப்(ரலி), நூல்கள்: முஸ்லிம் 1984 திர்மிதி, அபுதாவூத்

மேலும் நம் பகுதியிலுள்ள மக்கள் இந்த நோன்பை பெண்களுக்கு உண்டானது என்று கூறி ஆண்கள் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் அப்படி கட்டளையிடவில்லை. அதனால் சுன்னத்தான நோன்பு தானே என அலட்சியமாக இருக்காமல் அல்லாஹ்வின் அன்பைப்பெற முயற்சிக்க வேண்டும். 

பெருநாளை தொடர்ந்து ஷவ்வால்  மாதம் முழுவதும் நமக்கு வசதியான நாட்களில் இந்த ஆறு நோன்புகளையும் நோற்று காலமெல்லாம் நோன்பு நோற்ற பலனை அடைந்திட முயற்சி செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள் செய்திடுவானாக!

No comments:

Post a Comment