Pages

Tuesday, 30 July 2013

ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம்

    ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான 

ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.அதையே நமது நபி(ஸல்) அவர்கள் வலியுருத்தி கூறியுள்ளார்கள்.

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
சிறியவர்,பெரியவர், சுதந்திரமானவர், அடிமை அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரீச்சம் பழமோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாகக் (கொடுப்பதை) நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.புகாரி:1512.

 ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

 வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தும் ஃபித்ரா:

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும்ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.புகாரி:1509. 
ஃபித்ரா

No comments:

Post a Comment