Pages

Thursday, 16 May 2024

பாவமன்னிப்பு

 பாவமன்னிப்பு 


 عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَوْ أَخْطَأْتُمْ، حَتَّى تَبْلُغَ خَطَايَاكُمُ السَّمَاءَ، ثُمَّ تُبْتُمْ، لَتَابَ اللَّهُ عَلَيْكُمْ ".


உங்களுடைய பாவங்கள் வானத்தை அடையும் அளவிற்கு நீங்கள் பாவம் செய்தாலும் பிறகு ( குற்றங்களுக்காக மனம் வருந்தி ) நீங்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் உங்களுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான் என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸுனன் இப்னுமாஜா 4248 


عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ ".


செய்த பாவத்தை நினைத்து மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரி பாவமீட்சி பெறுபவர்  பாவமே செய்யாதவரைப் போன்றவராவார் என நபி ( ஸல் ) கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள் .


நூல் : ஸுனன் இப்னுமாஜா 4250 

Thursday, 2 May 2024

பாவங்களை அலட்சியமாக கருதாதீர்கள்

 பாவங்களை அலட்சியமாக கருதக்கூடாது


عَنْ عَائِشَةَ قَالَتْ : قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا عَائِشَةُ، إِيَّاكِ وَمُحَقَّرَاتِ الْأَعْمَالِ، فَإِنَّ لَهَا مِنَ اللَّهِ طَالِبًا ".


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் )அவர்கள் என்னிடம் ஆயிஷாவே , குற்றச் செயல்களை அற்பமாகக் கருதி ( அவற்றை ) அலட்சியம் செய்து விடாதே . 


ஏனெனில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதனைக் கண்காணி( த்து)ப் பதிவு செய்ப(வராகிய வான)வர் இருக்கிறார் என்று கூறினார்கள் 


- இதை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : முஸ்னத் தாரமி 2768 

பாவமன்னிப்பு

 பாவமன்னிப்பு 


 عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَوْ أَخْطَأْتُمْ، حَتَّى تَبْلُغَ خَطَايَاكُمُ السَّمَاءَ، ثُمَّ تُبْتُمْ، لَتَابَ اللَّهُ عَلَيْكُمْ ".


உங்களுடைய பாவங்கள் வானத்தை அடையும் அளவிற்கு நீங்கள் பாவம் செய்தாலும் பிறகு ( குற்றங்களுக்காக மனம் வருந்தி ) நீங்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் உங்களுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான் என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸுனன் இப்னுமாஜா 4248 


عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ ".


செய்த பாவத்தை நினைத்து மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரி பாவமீட்சி பெறுபவர்  பாவமே செய்யாதவரைப் போன்றவராவார் என நபி ( ஸல் ) கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள் .


நூல் : ஸுனன் இப்னுமாஜா 4250 

Wednesday, 1 May 2024

பிள்ளைகளை இழிவுப்படுதாதீர்கள்

குழந்தைகளை இழிவுப்படுதாதீர்கள்

عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: " (مَنِ انْتَفَى مِنْ وَلَدِهِ لِيَفْضَحَهُ فِي الدُّنْيَا فَضَحَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْأَشْهَادِ ؛ قِصَاصٌ بِقِصَاصٍ) ".

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் :

யார் ( தாம் பெற்ற ) தம் பிள்ளையையே இம்மையில் அவமானப்படுத்துவதற்காக,' அவன் எனக்கு பிறந்தவனில்லை' என்கிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளில் சாட்சியாளர்( களான மக்)கள் முன்னிலையில் இழிவுபடுத்துவான்.

இதுவே ( அவரது அடாத செயலுக்கான ) பழிக்குப் பழி ( நடவடிக்கை)யாகும்.

இதை இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 4795 

Wednesday, 24 April 2024

பொறுமையின் பரிசு..

 பொறுமைக்கு கிடைக்கும் பரிசு..


قوله تعالى: {سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ} [24]


“நீங்கள் பொறுமை காத்த காரணமாக உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக’’ (13: 24) எனும் உயர்ந்தோன் அல்லாஹ்வின் கூற்று


عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِي، عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: (هَلْ تَدْرُونَ أَوَّلَ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ) ؟ قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: (أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ الْفُقَرَاءُ، وَالْمُهَاجِرُونَ الَّذِينَ تُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَيُتَّقَى بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَ يَسْتَطِيعُ لَهَا قَضَاءً، فَيَقُولُ اللهُ عزّ وجل لِمَنْ يَشَاءُ مِنْ مَلاَئِكَتِهِ: ائْتُوهُمْ فَحَيُّوهُمْ، فَتَقُولُ الْمَلاَئِكَةُ: نَحْنُ سُكَّانُ سَمَائِكَ وَخِيرَتُكَ مِنْ خَلْقِكَ، أَفَتَأْمُرُنَا أَنْ نَأْتِيَ هَؤُلاَءِ فَنُسَلِّمَ عَلَيْهِمْ، قَالَ: إِنَّهُمْ كَانُوا عِبَاداً يَعْبُدُونِي، لاَ يُشْرِكُونَ بِي شَيْئاً، وَتُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَيُتَّقَى بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَ يَسْتَطِيعُ لَهَا قَضَاءً، قَالَ: فَتَأْتِيهِمُ الْمَلاَئِكَةُ عِنْدَ ذَلِكَ، فَيَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ {سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبى الدَّارِ }) .


* إسناده جيد.


674. அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: 


“அல்லாஹ்வின் படைப்பில் சொர்க்கத்தில் முதன் முதலில் நுழைவோர் யார் என்று நீங்கள் அறிவீர்களா?” என வினவினார்கள். 


அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள் என்று தோழர்கள் கூறினர். 


“அல்லாஹ்வின் படைப்பில் சொர்க்கத்தில் முதன் முதலில் நுழைவோர் ஏழைகள், முஹாஜிர்கள்தாம். இடைவெளி அவர்களைக்கொண்டே அடைக்கப்படும்.  


அவர்கள் தீமைகளைவிட்டுத் தவிர்ந்துகொள்வார்கள். அவர்களுள் ஒருவர் தம் தேவையை மனத்தில் வைத்தவாறே (அதை நிறைவேற்றிக்கொள்ள இயலாமல்) இறந்துபோய்விடுவார். 


அப்போது அல்லாஹ் தான் விரும்பிய வானவர்களிடம், “அவர்களிடம் சென்று அவர்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள்” என்று கூறுவான்.  


அப்போது வானவர்கள், “நாங்கள் உன் வானத்தில் வாழ்பவர்கள்; உன் படைப்பில் சிறந்தவர்கள். (அப்படியிருக்க) நாங்கள் அவர்களிடம் சென்று, அவர்களுக்கு முகமன் கூறுமாறு எங்களை நீ ஏவுகின்றாயா?” எனக் கேட்பார்கள். 


அதற்கு அல்லாஹ், “அவர்கள் என்னை வணங்குகின்ற அடியார்களாகவும், எனக்கு எதையும் இணையாக்காதவர்களாகவும் இருந்தார்கள். இடைவெளி அவர்களைக்கொண்டே அடைக்கப்படும். 


வெறுக்கத்தக்கவற்றை விட்டு விலகியிருந்தார்கள். அவர்கள் தம் தேவையை மனத்தில் வைத்தவாறே, அதை நிறைவேற்றிக்கொள்ள இயலாமல் இறந்துபோனார்கள்” என்று சொல்வான். 


அதன்பின் வானவர்கள் அவர்களிடம் வந்து, ஒவ்வொரு வாசல் வழியாகவும் நுழைவார்கள். “நீங்கள் பொறுமை காத்த காரணமாக உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக’’ (13: 24 என்று சொல்வார்கள்).


முஸ்னது அஹ்மத்: 6570


Friday, 19 April 2024

தொழுகை கண்டிப்பாக மனிதனை பக்குவபடுத்தும்

 தொழுகை கண்டிப்பாக மனிதனை பக்குவபடுத்தும்


عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : إِنَّ فُلَانًا يُصَلِّي بِاللَّيْلِ، فَإِذَا أَصْبَحَ سَرَقَ، قَالَ : " إِنَّهُ سَيَنْهَاهُ مَا تَقُولُ ".


حكم الحديث: إسناده صحيح رجاله ثقات رجال الشيخين


இன்ன மனிதர் இரவில் தொழுகிறார் ( ஆனால் ) காலை பொழுதில் திருடுகிறார் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்.


அதற்க்கு நபி (ஸல் )" அவரது தொழுகை அவரை அத்தீமையிலிருந்து விரைவில் தடுத்துவிடும்" என்று கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்


நூல் : முஸ்னத் அஹ்மத் ( 9778) தரம் : ஸஹீஹ்

எந்த வகையான தர்மம் மிகவும் உயர்ந்தது ?

 எந்த வகையான தர்மம் மிகவும் உயர்ந்தது ?


حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا قَالَ ‏ "‏ أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ، تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى، وَلاَ تُمْهِلُ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا، وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفُلاَنٍ ‏"‏‏.‏


ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார்.


 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். 


எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். 


அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. 


ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 


இதை அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்


 நூல் : புஹாரி (1419 ) முஸ்லிம் ( 1032 )