Pages

Friday, 3 March 2023

பாங்கு கூறுவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்

 பாங்கு கூறுவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்


 المُؤَذِّنُ يُغفَرُ له مَدَى صَوتِه ، و أجْرُهُ مِثلُ أجرِ مَنْ صَلَّى مَعَهُ


الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : صحيح الجامع


الصفحة أو الرقم: 6643 | خلاصة حكم المحدث : صحيح 


பாங்கு கூறுபவருக்கு அவரின் சப்தம் சென்றையும் தூரம் அளவிற்க்கு அவருடைய பாவங்களும் மன்னிக்கப்படும். அவருடைய கூலி அவருடன் தொழுதவரின் கூலியை போன்றதாகும் என்று நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் ஜாமி 6643 

பள்ளிவாசல் கட்ட உதவுவது

பள்ளிவாசல் கட்ட உதவுவது

مَن بَنى مَسجدًا للَّهِ كمِفحَصِ قَطاةٍ ، أو أصغرَ ، بَنى اللَّهُ لَهُ بيتًا في الجنَّةِ

الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 609 | خلاصة حكم المحدث : صحيح

யாரேனும் அல்லாஹ்வுக்காக புறா போன்ற பறவையின் இறக்கை அளவோ அல்லது அதனை விட சிறிய அளவோ பள்ளிவாயில் கட்டுவதில் பங்கெடுத்துக் கொண்டால் அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 609 தரம் : ஸஹீஹ்

பெரியவர்களை கண்ணியப்படுத்த வேண்டும்

 பெரியவர்களை கண்ணியப்படுத்த வேண்டும்


ليس منَّا مَن لم يُوقِّرِ الكبيرَ ويرحَمِ الصَّغيرَ ويأمُرْ بالمعروفِ ويَنْهَ عن المنكَرِ


الراوي : عبدالله بن عباس | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 458 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه 


பெரியோரைக் கண்ணியப்படுத்தி,சிறுவர் மீது அன்பு காட்டி, நன்மையை ஏவி, தீமையை தடுக்காதவர் எம்மை சார்ந்தவர் இல்லை என்று நபி ஸல் கூறியதாக  இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 458 தரம் : ஸஹீஹ்