💥 #குர்ஆன்_ஓதும்போது . . . 💥
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அல்லாஹ்வின் வார்த்தைகளில் சில,,,
💥 .
அவற்றில் சில . . .
💥 இப்ராஹீம் (அலை), நெருப்பில் போடப்பட்ட போது, 💥
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ
“அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” (அல்குர்ஆன் : 3:173) என்று கூறியதன் மூலம் அவர்கள் பாதுகாக்கப் பட்டதை "நமக்கான இறைவனின் கடிதத்தில்" நாம் குறித்து வைக்க வேண்டும்.
💥 மகனார் யூசுஃப் (அலை) அவர்களைத் தொலைத்தபின் தந்தை யஃகூபு (அலை), 💥
اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّـىْ وَحُزْنِىْۤ اِلَى اللّٰهِ
“என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்." (அல்குர்ஆன் : 12:86) என்று கூறியதன் மூலம் மீண்டும் மகனைச் சந்திக்கும் வாய்ப்பை அடைந்ததையும் குறிக்க வேண்டும்.
💥 அய்யூபு (அலை), நோய்வாய்ப்பட்ட போது, 💥
اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
“நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்தார்."(அல்குர்ஆன் : 21:83) அதன் மூலம் அவர்கள் பெற்ற ஆரோக்கியமும் நம் குறிப்பேட்டில் இருக்க வேண்டும்.
.
💥 கண்ணுக்கு முன்னால் எப்போதும் இருக்க வேண்டிய இறைச்செய்தி . . . 💥
وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்." (அல்குர்ஆன் : 2:186) என்பதாகும்.
💥 நாம் கவலைப்பட வேண்டியதில்லை; அல்லாஹ் நம்மோடிருக்கிறான். 💥
உலக வாழ்வில் நமக்குக் கிடைக்காமல் போகும் அநேகமானவற்றில் மிகக் கடினமானது, அல்லாஹ்வை நினைவு கூரவிடாமல் நம் நாவும், சிந்தனையும் தடுக்கப்படுவது தான்.
اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطٰنُ فَاَنْسٰٮهُمْ ذِكْرَ اللّٰهِ
"அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான்."
(அல்குர்ஆன் : 58:19)
.
நாம் எப்போதும் அல்லாஹ்வின் அருட்கொடைகளில் தான் இடம் மாறிக் கொண்டிருக்கிறோம்.
💥 கஷ்டத்தில் ஒருமுறை; இலகுவில் ஒரு முறை. இரண்டுமே அருட்கொடை தான். 💥
💥 இலகுவான நிலையில் நன்றி செலுத்தும் வாய்ப்பை அல்லாஹ் வழங்குகிறான். 💥
وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ
"அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்." (அல்குர்ஆன் : 3:144)
💥 கஷ்டத்தில் பொறுமையோடிருக்கும் வாய்ப்பை அல்லாஹ் வழங்குகிறான். 💥
اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்." (அல்குர்ஆன் : 39:10)
அல்லாஹ்வின் அருட்கொடைகள் அனைத்தும் நன்றி செலுத்தத் தகுதிந்தவையாகும்.
.
💥 யூனுஸ் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். 💥
فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِيْنَۙ لَلَبِثَ فِىْ بَطْنِهٖۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ
"ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
(அல்குர்ஆன் : 37:143, 144)
மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்வது, கடினமான நேரத்தில் பயன்தருவதாக அமையும்.
.
💥 நம்முடன் இருப்பது இரண்டே வழிகள் தான். ஒன்று, 💥
فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ
"நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன்."
(அல்குர்ஆன் : 2:152)
نَسُوا اللّٰهَ فَنَسِيَهُمْ
"அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான்.".
(அல்குர்ஆன் : 9:67)
எந்த வழியில் செல்வதென்பதை தீர்மானிக்க வேண்டியது நாம் தான்; அல்லாஹ்வை நினைவு கூரும் வழி செல்லவே தீர்மானிப்போமாக!
வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக!