Pages

Friday, 13 June 2014

பாவியாக்கும் "பராஅத்" இரவு!...

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு!
முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே
மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க!
என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு
முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.
இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு,
வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள்
போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக
கோழிக் குழம்பு வைப்பார்கள்.
மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே
சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும்.
ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின்
வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.
தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார்.
எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை
ஓத வேண்டுமாம். எதற்காக?
முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்
இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும்,
நீண்ட ஆயுளுக்காகவும்
மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும்
ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.
அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10மணிக்கு நடைபெறும்.
காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை
முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை.
அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை
விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப்
போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?
அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும்.
எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100ரக்அத்களாம்.
வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள்
கொண்ட தொழுகையும் உண்டு.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும்
சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள்
குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான்
முன்னுரிமை வழங்குவார்கள்.
அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான்
வேடிக்கை.
பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?
--------------------------------------------------------------------------------
ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும்.
இதை செய்யக் கூடியவர் பாவியாவார்.
இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள்
மீது கட்டாயமாகும்.
(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன்
என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான்
பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும்.
இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.
(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில்
முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.)
பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும்
கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள்
இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை.
மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ?
அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!
பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?
----------------------------------------------------------
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.
(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன்,
பாகம்: 2, பக்கம்: 273)
ஏன் இந்த சிறப்பு?
அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான்
சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை
15ல் வரும் பராஅத் இரவாம்.
அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான
முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள்
நவீன கால பராஅத் அறிஞர்கள்.
இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா?
பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று
கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது
தவறா? என்பது தான் அக்கேள்வி.
மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா?
அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.
பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும்
ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்!
இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது.
சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.
முதல் ஆதாரம்
------------------------
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம்.
நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான்
உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.
அல்குர்ஆன் 44:2-4
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு,
பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம்.
திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை
இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும்.
அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.
(அல்குர்ஆன் 97:1)
அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.
(அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை)
பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர்
அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்2:185)
இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு
என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு
அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும்
வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
இரண்டாம் ஆதாரம்
-------------------------------
ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில்
நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா?
நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன்.
சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக்
கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378.
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல.
இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா
என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும்,
இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.
அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர்
வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள்.
அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம்
அவர்கள் கூறியுள்ளார்கள்.
மூன்றாம் ஆதாரம்
----------------------------
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல்
வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள்
பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி 670.
இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல.
இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின்
அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை.
அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
நான்காவது ஆதாரம்
--------------------------------
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக
நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த
மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை.
ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்
நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,
ஃபலாயிலுர் ரமளான் - இப்னு அபித் துன்யா, பாகம்:
1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8
இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார்
என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர்.
நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார்.
இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார்.
அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்.
இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார்.
இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான
நிலையை அடைகிறது.
ஐந்தாவது ஆதாரம்
-----------------------------
ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ. நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9.
இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ
என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர்.
நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார்.
இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள்,
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச்
சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி
அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில்
(பாகம்: 2, பக்கம்: 129)குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக் கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக் கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள்
என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம்
சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான
அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்:
1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில்,
இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை
எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும்,
அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.
அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு
ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக்
கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக
இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர்,ஷஅபான்
15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ
முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது.
என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில்
அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால்
அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று
இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)
முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்:
நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப்
பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்)
அவர்கள் பலவீனமானவனே!
15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.
நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ்,
பாகம்: 1 பக்கம்: 12
பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில்
இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2697.
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால்
அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். நூல்: முஸ்லிம் 3243.
எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும்
மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்
தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று
செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி,
அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார்.
இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்!...

சுயபரிசோதனை செய்து பாருங்கள் :

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று முன்பே அல்லாஹ்வுக்குத் தெரியுமா? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் தெரியும் என்று சொன்னார்கள்.

அவர் அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொருவரும் எதை அடைவதற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள் என்று பதிலளித்தார்கள்!"..

முஸ்லிம் :6596

யாசிப்பதை விடச் சிறந்ததாகும் "

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தமது கயிற்றை எடுத்துக்கொண்டு(போய்) விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 

நூல்: புகாரி 1470.1471,2373,2374

நரைமுடிக்கு கருப்பு சாயமிடுவதற்குத் தடை

ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﺭَﻓَﻌَﻪُ ﺃَﻧَّﻪُ ﻗَﺎﻝَ ﻗَﻮْﻡٌ ﻳَﺨْﻀِﺒُﻮﻥَ ﺑِﻬَﺬَﺍ ﺍﻟﺴَّﻮَﺍﺩِ ﺁﺧِﺮَ ﺍﻟﺰَّﻣَﺎﻥِ ﻛَﺤَﻮَﺍﺻِﻞِ ﺍﻟْﺤَﻤَﺎﻡِ ﻟَﺎ ﻳَﺮِﻳﺤُﻮﻥَ ﺭَﺍﺋِﺤَﺔَ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺭﻭﺍﻩ ﺍﻟﻨﺴﺎﺋﻲ 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள் கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்கத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), 
நூல் : நஸயீ (4988)

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ஆதாரம்: நஸயீ 5391, 5444

بِسْمِ اللهِ رَبّ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ 

பி(B]ஸ்மில்லாஹி ரப்பி(B] அவூது பி(B](க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய 

பொருள்: 

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், #அநீதிஇழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்லக் கூடாது

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : 
எவன் ( பிற ) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்கு கேடு தான் . அவனுக்கு கேடு தான்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ( ரலி )

நூல் : திர்மிதி 2237

இவ்வுலகம் எத்தகையது?


حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِر
ِ
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2257

“இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்“என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 2257

" உண்மையை பேசுவோம் "

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையே பேசுங்கள்.உண்மை நன்மைக்கு வழிகாட்டும்.நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டேop இருப்பார்;அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார்.இறுதியில் அல்லாஹ்விடம் வாய்மையாளர்(ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.

அறிவிப்பாளர்: அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 5083

தினம் ஒரு ஹதீஸ்

இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தில் இருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகித்திற்கும் இடையில் உள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போத உலகில் அவா்களுக்கிடையெ நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக் கொருவா் கணக்கு தீரத்துக் கொள்வார்கள். இறுதியில் அவா்கள் பாவங்களில் இருந்து நீங்கி தூய்மையாகி வரும்போது சொர்க்கத்திற்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவா்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். (அபு ஸயீத் அல் குத்ரி (ரலி) புகாரி 2440)

தினம் ஒரு ஹதீஸ்

இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தில் இருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகித்திற்கும் இடையில் உள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போத உலகில் அவா்களுக்கிடையெ நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக் கொருவா் கணக்கு தீரத்துக் கொள்வார்கள். இறுதியில் அவா்கள் பாவங்களில் இருந்து நீங்கி தூய்மையாகி வரும்போது சொர்க்கத்திற்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவா்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். (அபு ஸயீத் அல் குத்ரி (ரலி) புகாரி 2440)

ஏகத்துவமும் சோதனைகளும்

ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப் பட்டவர்கள் யார்?'' என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "நபிமார்கள் பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு முதுகெலும்பாக (உறுதியாக) இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப்பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப் படுவான். ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்'' என்று கூறினார்கள்.
நூல்: திர்மிதி 2322
 

தொழுகையின் சட்டங்கள்

தொழுகையின் சட்டங்கள்
9.கடமையான குளிப்பு
உளூச் செய்யும் அவசியம் ஏற்படும்
போது உளூச் செய்து விட்டுத் தான் தொழ
வேண்டும் என்பது போல, குளிக்கும்
அவசியம் ஏற்பட்டால் குளித்து விட்டுத் தான்
தொழ வேண்டும்.
குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல்
தொழக் கூடாது.
ஒரு மனிதன்
குளிப்பது எப்போது கடமையாகும்?
குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய
ஒழுங்குகள் யாவை?என்பதைக் காண்போம்.
உடலுறவு குளிப்பைக் கடமையாக்கும்
ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டால்
இருவர் மீதும்
குளிப்பது கடமையாகி விடும்.
குளித்து விட்டுத் தான் அவர்கள்
தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
'ஒரு ஆண் தனது மனைவியின்
கால்களுக்கிடையே அமர்ந்து பின்னர்
முயற்சி செய்தால்
குளிப்பு கடமையாகி விடும்'என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 291, முஸ்லிம் 525
முஸ்லிமின் 525 அறிவிப்பில்
விந்து வெளிப்படாவிட்டாலும்
குளிப்பது கடமை என்ற வாக்கியம்
மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.
தூக்கத்தில் விந்து வெளிப்படுதல்
பெரும்பாலும் ஆண்களுக்கும் மிகச் சில
பெண்களுக்கும் தூக்கத்தின்
போது விந்து வெளிப்படுவதுண்டு. சில
நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற
கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப்
பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த
அடையாளமும் ஆடையில் இருக்காது.
விந்து வெளிப்பட்டது உறுதியாகத்
தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம்
இருந்தால் குளிப்பது கடமையாகி விடும்.
குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.
விந்து வெளிப்பட்டது போன்ற
உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த
அடையாளமும் தெரியாவிட்டால்
குளிப்பது கடமையில்லை.
'அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசுவதில்
அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்.
ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில்
விந்து வெளிப்பட்டால் அவள்
குளிப்பது அவசியமா?'
என்று உம்மு சுலைம் (ரலி) என்ற
பெண்மணி கேட்டார். அதற்கு நபி (ஸல்)
அவர்கள், 'விந்து வெளிப்பட்டதை அவள்
கண்டால் குளிப்பது அவசியம்'
என்று விடையளித்தார்கள். இதைக் கேட்ட
உம்மு ஸலமா (ரலி) அவர்கள், 'பெண்களுக்கும்
விந்து வெளிப்படுமா?'
என்று கேட்டு விட்டுச் சிரித்தார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'சில நேரங்களில்
தாயைப் போல் குழந்தை எப்படிப்
பிறக்கின்றது?' என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரீ 3328, முஸ்லிம் 471
நபி (ஸல்) அவர்களின்
மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களின்
வீட்டுக்கு அருகில் நான் வசித்தேன்.
அவர்களின்
வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன்.
நபி (ஸல்) அவர்கள் உள்ளே வந்த போது,
'அல்லாஹ்வின் தூதரே! தன் கணவன் தன்னுடன்
உடலுறவு கொள்வது போல் ஒரு பெண்
கனவு கண்டால் அவள் குளிக்க வேண்டுமா?'
என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
'விந்து வெளிப்பட்டதைக் கண்டால் அவள்
குளிக்க வேண்டும்'
என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சுலைம் (ரலி)
நூல்: அஹ்மத் 25869
விந்து வெளிப்பட்டால் தான்
குளிப்பது கடமை என்பதையும்,
விந்து வெளிப்படுவது போல் தோன்றினால்
குளிப்பது கடமையில்லை என்பதையும்
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்த
ு அறிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் நின்றதும் குளிப்பது அவசியம்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக்
கூடாது என்பதை நாம் அறிவோம்.
மாதவிடாய் நின்றவுடன் அவர்கள்
குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.
அபூஹுபைஷ் என்பாரின் மகள்
ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம்
வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்
இரத்தப் போக்கிலிருந்து சுத்தமாவதில்லை.
எனவே நான்
தொழுகையை விட்டு விடலாமா?'
என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
'(தொழுகையை விடக்) கூடாது.
அது ஒரு நோய் தானே தவிர மாதவிடாய்
அல்ல! எனவே மாதவிடாய் வரும்
போது (மட்டும்)
தொழுகையை விட்டு விடு! மாதவிடாய்
நின்றதும் குளித்து விட்டுத் தொழு'
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 320
மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத்
தொழ வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்
விளக்குகிறது.
ஜும்ஆவுக்கு முன் குளிப்பது அவசியம்
வெள்ளிக்கிழமை குளிப்பது கட்டாயக்
கடமையாகும். இது பற்றி மிகத் தெளிவான
கட்டளை நபி (ஸல்) அவர்களால் பிறப்பிக்கப்பட்
டுள்ளது. 'பருவ வயது அடைந்த ஒவ்வொருவர்
மீதும் வெள்ளிக்கிழமை குளிப்பது (வாஜிப்)
கட்டாயக் கடமை' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 858, 879, 880, 895, 2665, முஸ்லிம்
1397
வெள்ளிக்கிழமை குளிப்பது அவசியம்
என்று பொதுவாகக் கூறப்படுவதால்
வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆவுக்குப்
பின்னர் கூட குளிக்கலாம் என்று கருதக்
கூடாது. ஏனெனில் வேறு ஹதீஸ்களில்
ஜும்ஆவுக்கு முன்னரே குளித்து விட
வேண்டும் என்று தெளிவாகக்
கூறப்பட்டுள்ளது.
'உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு வருவதாக
இருந்தால் அவர் குளித்து விடட்டும்'
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 877
குளிக்கும் முறை
மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட
அசுத்தத்தையும் கழுவுதல்
கடமையான குளிப்பை நிறைவேற்றும்
போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட
அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும்
முதலில் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள்
இவ்வாறு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான
குளிப்பை நிறைவேற்றும்
போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக்
கையினால் கழுவினார்கள். பின்னர்
கையைச் சுவற்றில் தேய்த்துக்
கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய
உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து,
இரு கால்களையும் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: புகாரீ 260, முஸ்லிம் 476
வலது கையால் இடது கையில் தண்ணீர்
ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக்
கழுவுவார்கள்
என்று புகாரீ259வது ஹதீஸில்
கூறப்பட்டுள்ளது.
உளூச் செய்தல்
கடமையான குளிப்பை நிறைவேற்றும்
போது, அதற்கு முன்னர் உளூச்
செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச்
செய்யும் போது, கால்களை மட்டும்
கடைசியாக (குளித்து முடிக்கும் போது)
கழுவுவதும் நபி (ஸல்) அவர்களின்
வழிமுறையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான
குளிப்பை நிறைவேற்றும்
போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு,
தொழுகைக்குச் செய்வது போல் உளூச்
செய்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 475
குளித்து முடித்ததும் தாம் நின்ற
இடத்தை விட்டு சற்று விலகி,
இரு கால்களையும் நபி (ஸல்) அவர்கள்
கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: புகாரீ 249, முஸ்லிம் 476
தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல்
நபி (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில்
நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப்
பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர்
மூன்று தடவை தலையில்
தண்ணீரை ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 474 ....பின்னர்
தமது கையால் தலை முடியைக்
கோதுவார்கள். முடியின் அடிப்பாகம்
நனைந்து விட்டது என்று அவர்கள்
நினைக்கும்
போது மூன்று தடவை தலையில் தண்ணீர்
ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 273, முஸ்லிம் 474
இரண்டு, மூன்று தடவை தண்ணீர்
ஊற்றுவது போதும்
கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்க
ு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும்
என்பது அவசியமில்லை. மாறாக
மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றிய
பின்னர் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள
வேண்டும். நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக
நான் தண்ணீர் எடுத்து வைத்தேன்.
தமது இரு கைகளிலும் தண்ணீரைச்
சாய்த்து இரண்டு தடவைகள்
அல்லது மூன்று தடவைகள் கைகளைக்
கழுவினார்கள். பின்னர்
தமது வலது கையால்
இடது கை மீது தண்ணீரைச்
சாய்த்து தமது மர்மஸ்தானத்தைக்
கழுவினார்கள். பின்னர் தமது கையைத்
தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர்
வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம்
செய்தார்கள். பின்னர் முகத்தையும்,
கைகளையும் கழுவினார்கள்.
தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள்.
பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம்
நின்ற இடத்திலிருந்து விலகி கால்களைக்
கழுவினார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: புகாரீ 257, முஸ்லிம் 476
நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல்
இருக்குமோ என்று சில பேர் எண்ணிக்
கொண்டு குடம், குடமாகத்
தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம்
அலட்டிக் கொள்வது தேவையில்லை.
நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக்
கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக்
கோதிய பின் மூன்று தடவை தலையின்
மீது தண்ணீர் ஊற்றிக்
கொள்வதே போதுமானதாகும்.
இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்த
ு அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக
ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில்
குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம்
செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர்,
'நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம்
(தேய்த்துக்) கழுவுவேன்'
என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்)
அவர்கள், 'நான் மூன்று கை தண்ணீர்
எடுத்து என் தலையில் ஊற்றிக்
கொள்வதோடு சரி' என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூல்: முஸ்லிம் 493
'நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர்
எடுத்துத் தலையில் ஊற்றிக்
கொள்வதோடு சரி' என்று நபி (ஸல்)
கூறியதாக புகாரீ 254 அறிவிப்பில் உள்ளது.
கடமையான குளிப்பு அல்லாத சாதாரண
குளிப்பைப் பற்றியதாக
இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக்
கூடும். முஸ்லிமில் இடம் பெற்ற (494வது)
ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப்
பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்)
அவர்கள் இவ்வாறு கூறியதாகக்
கூறப்பட்டுள்ளது.
எனவே கடமையான குளிப்புக்கும்
இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை.
பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா?
பின்னப்பட்ட சடைகளை அவிழ்த்து விட்டுத்
தான் கடமையான குளிப்பை நிறைவேற்ற
வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.
அது தவறாகும். ஹதீஸ்களை ஆராயும்
போது முடிக்குக் கீழே உள்ள தோல் தான்
கட்டாயமாக நனைய வேண்டுமே தவிர
ஒவ்வொரு முடியும் நனைய வேண்டும்
என்பது கட்டாயமில்லை என்பதை அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஈரக் கையால் தலையின்
அடிப்பாகத்தைத் தேய்ப்பார்கள் என்றும்
அடிப்பாகம்
நனைந்து விட்டது என்று நினைக்கும்
போது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்
என்றும் கூறப்பட்ட விளக்கத்திலிருந
்து இதை அறியலாம்.
இதை இன்னும் தெளிவாகவே விளக்கும்
ஹதீஸ்களும் உள்ளன.
'அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில்
சடை போட்டிருக்கிறேன். கடமையான
குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க
வேண்டுமா?' என்று நபி (ஸல்) அவர்களிடம்
கேட்டேன். அதற்கு அவர்கள்,
'வேண்டியதில்லை; உன் தலையில்
மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக்
கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன்
மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ
தூய்மையாகி விடுவாய்'
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 497
எனவே தலையின் அடிப்பாகம்
நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள
முடிகள் நனையாமல் இருப்பதால்
குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.
சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது,
பாதிக்கு மேற்பட்ட முடிகள்
நனைவதற்கு வாய்ப்பே இல்லை.
அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத்
தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள
வேண்டும்.